பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றிலை விலை சரிவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், ப.வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலை கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு

ப.வேலூர்: ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், ப.வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலை கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வார ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை முதல்ரகம், 104 கவுளி கொண்ட சுமை, 4,000; இரண்டாம் ரகம், 2,000; கற்பூரி வெற்றிலை முதல்ரகம், 3,500; இரண்டாம் ரகம், 1,500 ரூபாய் என ஏலம் போனது. நேற்று, வெள்ளைக்கொடி முதல் ரகம், 3,500; இரண்டாம் ரகம், 1,500; கற்பூரி வெற்றிலை முதல் ரகம், 3,000; இரண்டாம் ரகம், 1,000 ரூபாய் என ஏலம் போனது. வெற்றிலை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X