பொது செய்தி

தமிழ்நாடு

வெறிநாய்க்கடி நோய் தின தடுப்பூசி முகாம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
நாமக்கல்: உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு முகாமில், மாவட்டம் முழுவதும், 2,576 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. செப்., 28 உலகவெறிநாய்க்கடி நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. மோகனூரில் நடந்த முகாமுக்கு கால்நடை உதவி மருத்துவர் காளிமுத்து தலைமை

நாமக்கல்: உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு முகாமில், மாவட்டம் முழுவதும், 2,576 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. செப்., 28 உலகவெறிநாய்க்கடி நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. மோகனூரில் நடந்த முகாமுக்கு கால்நடை உதவி மருத்துவர் காளிமுத்து தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் மருத பாண்டி துவக்கி வைத்தார். நாமக்கல், திருச்செங்கோடு மண்டலத்தில் உள்ள, 105 கால்நடை மருந்தகம், ? கால்நடை மருத்துவமனைகளில் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும், 2,454 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. நாமக்கல் கால்நடை மருத்துவமனை சிகிச்சை வளாகத்தில் நடந்த முகாமுக்கு, கல்லூரி முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்தார். சிகிச்சை துறை தலைவர் தர்மசீலன், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், பாட்னாவின் பீகார் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சமந்த்ரே, ஐதராபரத் கால்நடை மருத்துவக் கல்லூரி தலைவர் ரெட்டி, ஒடிசா மாநிலத்தின், கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சாந்தி குமார்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில், 122 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X