பொது செய்தி

தமிழ்நாடு

பெரியமணலி அஞ்சலகம் தரம் உயர்வு

Added : செப் 29, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் பெரியமணலி கிளை அஞ்சலகம் செயல்பட்டு வந்தது. எம்.பி., சின்ராஜ் பரிந்துரைப்படி, 58வது கணினி மயமாக்கப்பட்ட துணை அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் கீழ் கோக்கலை, சின்னமணலி கிளை அஞ்லகம் செயல்படும். ஜேடர்பாளையம், பெரியமணலி, குமரவேலிபாளையம், கோட்டப்பாளையம். சின்னமணலி, கொளத்துப்பாளையம், தேவூராம்பட்டி, பாளையம், கோக்கலை,

நாமக்கல்: நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் பெரியமணலி கிளை அஞ்சலகம் செயல்பட்டு வந்தது. எம்.பி., சின்ராஜ் பரிந்துரைப்படி, 58வது கணினி மயமாக்கப்பட்ட துணை அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் கீழ் கோக்கலை, சின்னமணலி கிளை அஞ்லகம் செயல்படும். ஜேடர்பாளையம், பெரியமணலி, குமரவேலிபாளையம், கோட்டப்பாளையம். சின்னமணலி, கொளத்துப்பாளையம், தேவூராம்பட்டி, பாளையம், கோக்கலை, நெய்க்காரம்பாளையம், இளையம்பாளையம், கருப்ப கவுண்டம்பாளையம், கரியாம்பாளையம், மேட்டுப்பாளையம். கந்தசாமிபுதூர், துண்டுகாட்டூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 637410 என்ற அஞ்சல் குறியீட்டுக்கு பதில் (பின்கோடு) 637216 என்ற பின் கோடை பயன்படுத்த, இந்திய அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியமணலி கிளை அஞ்சலமாக இருந்தபோது, ஒரு சில குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே மக்களால் பயன்பெற முடிந்தது. தற்போது தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், அனைத்து விதமான சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 'அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளையும், பெரியமணலி துணை அஞ்சலகத்துக்குட்பட்ட கிராம மக்கள் பெற்று பயன்பெறலாம்' என, சேலம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X