கற்போம், எழுதுவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கற்போம், எழுதுவோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : செப் 29, 2021
Share
புதுச்சத்திரம்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில், புதுச்சத்திரம் வட்டாரத்தில், 25 மையங்களில், 552 கற்போர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்பறிவு, எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில்,

புதுச்சத்திரம்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில், புதுச்சத்திரம் வட்டாரத்தில், 25 மையங்களில், 552 கற்போர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்பறிவு, எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், சமுதாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, அரசு மேல்நிலைப்பள்ளிகள் புதுச்சத்திரம், பாச்சல் மற்றும் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடந்தது. தலைமையாசிரியர்கள் குணசேகரன், சரவணன், வட்டார கல்வி அலுவலர்கள் கோபால கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், நாடகம் மூலம், கல்வி அறிவின் அவசியத்தையும், சிலேட் என்ற கோமாளி கூத்து மூலம், கற்போம் எழுதுவோம் மையத்தில் சேர்ந்து படிப்பதன் அவசியம். தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு மூலம், 1,098 என்ற எண் குறித்த விழிப்புணர்வையும், பெண் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வும், ஆடல், பாடல் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X