பொது செய்தி

தமிழ்நாடு

6 சட்டசபை தொகுதிகளில் 11 ஓட்டுச்சாவடி மாற்றம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றியமைத்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தமுள்ள, 1,623 ஓட்டுச்சாவடிகளில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, மூன்று

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றியமைத்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தமுள்ள, 1,623 ஓட்டுச்சாவடிகளில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, மூன்று புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், சேதமடைந்த ஓட்டுச்சாவடி கட்டடங்களுக்கு பதில், வேறு இடங்கள் தேர்வு செய்யப்படும். ஆறு தொகுதிகளிலும், 11 ஓட்டுச்சாவடிகள் கட்டட மாற்றம், அமைவிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ராசிபுரம் தொகுதியில், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தொகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி (வடக்கு) நல்லிபாளையம். திருச்செங்கோடு தொகுதியில், ஊரக சமுதாய சேவை மைய கட்டடம், ஒக்கிலிப்பட்டி ஆகிய, மூன்று ஓட்டுச்சாவடிகள், 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருப்பதால், பிரித்து புதிதாக ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, ஆர்.டி.ஓ.,க்கள் மஞ்சுளா, இளவரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X