பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோலிய வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
நாமக்கல்: மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின், பொதுக்குழு மற்றும் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். புதிய தலைவராக சரவணன், செயலாளராக ஆனந்த் பொன்ராம், பொருளாளராக சுப்ரமணியம், துணைத் தலைவர்களாக செல்வராஜ், ரங்கசாமி, துணை செயலாளர்களாக ?ஹம்சந்த், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், புதிய நிர்வாகிகளாக

நாமக்கல்: மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின், பொதுக்குழு மற்றும் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். புதிய தலைவராக சரவணன், செயலாளராக ஆனந்த் பொன்ராம், பொருளாளராக சுப்ரமணியம், துணைத் தலைவர்களாக செல்வராஜ், ரங்கசாமி, துணை செயலாளர்களாக ?ஹம்சந்த், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் வளர்ச்சி, உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய நிர்வாகிகளுக்கு, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X