பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்., அலுவலகம் முற்றுகை: மாடகாசம்பட்டியில் பரபரப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம் மாடகாசம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், நேற்று காலை உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, மாடகாசம்பட்டி பகுதிக்கு, இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. தேசிய ஊரக வேலை

மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம் மாடகாசம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில், நேற்று காலை உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, மாடகாசம்பட்டி பகுதிக்கு, இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பளிப்பதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மோகனூர் பி.டி.ஓ., தேன்மொழி, ஒன்றிய பொறியாளர் சுமதி, மண்டல துணை பி.டி.ஒ., சுதா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதையடுத்து மாலை, 3:30 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டம், ஐந்து மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X