சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் வாலிபர் சாவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்தார். குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. கடந்த, 6 மாதம் முன்புதான் இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு, 11:00 மணியளவில் வட்டமலை தனியார் கல்லூரி எதிரில் சேலம்- கோவை

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்தார். குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. கடந்த, 6 மாதம் முன்புதான் இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு, 11:00 மணியளவில் வட்டமலை தனியார் கல்லூரி எதிரில் சேலம்- கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X