மத நம்பிக்கை குறித்து அவதூறு பேச்சு: பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை

Added : செப் 29, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
லாகூர்: பாகிஸ்தானில் மத நம்பிக்கை குறித்து அவதுாறாக பேசிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக பேசியுள்ளார். தன்னை இறை துாதர் என கூறியுள்ளார். இதுகுறித்து மதகுரு ஒருவரது புகார் தொடர்பாக சல்மா தன்வீர் மீது போலீசார்
Woman, Death Penalty, Blasphemy, Lahore, Death, Fine, மத நம்பிக்கை, அவதூறு பேச்சு, பள்ளி தலைமை ஆசிரியை, மரண தண்டனை

லாகூர்: பாகிஸ்தானில் மத நம்பிக்கை குறித்து அவதுாறாக பேசிய தனியார் பள்ளி தலைமை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக பேசியுள்ளார். தன்னை இறை துாதர் என கூறியுள்ளார். இதுகுறித்து மதகுரு ஒருவரது புகார் தொடர்பாக சல்மா தன்வீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை லாகூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, 'சல்மா மனநிலை பாதிக்கப்பட்டவர்' என, அவரது வழக்கறிஞர் கூறினார்.


latest tamil news


பஞ்சாப் மனநல மருத்துவக் கழக பரிசோதனையின் முடிவில், அவர் மனநலம் பாதிக்கப்படாதவர் என அறிக்கை தாக்கலானது. இதையடுத்து சல்மாவுக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி மன்சூர் அஹ்மத் தீர்ப்பளித்தார். பாக்.,கில் மத நம்பிக்கையை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு இதுபோல் கடும் தண்டனை வழங்குவது வழக்கமாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
29-செப்-202122:46:22 IST Report Abuse
Rasheel காட்டுமிராண்டிகள் ராஜ்யத்தில் உய்யலாலா....
Rate this:
Cancel
Siva Santhanam - Pune,இந்தியா
29-செப்-202120:07:48 IST Report Abuse
Siva Santhanam மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய அந்த 'மஹான்', இதே கமெண்ட்-ஐ அவரது தாயோ, சகோதரியோ, மகளோ கூறி இருந்தால் இதே தண்டனை வழங்கி இருப்பாரா என்பதை இந்த 'இறைத்தூதர்கள்' விளக்க வேண்டும். இங்கு கருத்து கூறியுள்ள 'அறநெறியாளர்கள்' பலர் எப்போதும் போல் சாமியார்களையே குறி வைப்பரவர்கள், கோயில்களை கொள்ளையடித்தவர்களையம், கோயில்கள் இருந்த இடத்தில் சர்ச்களையும் மசூதிகளையம் கட்டியவர்களை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது மட்டும் அன்றி இன்னும் ஒரு படி மேலே சென்று இந்துக் கடவுள்களை 'ஷைத்தான்கள்' என்று கண்டு பிடித்தவர்களும் உண்டு. அவர்களுக்கு என்ன தண்டனை? மொத்தத்தில் மனிதாபிமானிகளும், இந்துக்களும் தான் இழித்த வாயர்கள். நடக்கட்டும் நாடகம். ஆனால் வாய்மை என்றென்றும் வென்றே ஆக வேண்டும். அதுதான் இயர்க்கையின் நியதி. For every action ... there should be equal and opposite reaction ...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-செப்-202122:14:36 IST Report Abuse
தமிழவேல் சிவா, தரப்பட்ட அந்த அறநெறிகள் அனைத்துமே கும்பல்களின் கருத்துக்களுக்கு சொன்ன பதில். அதாவது, அது போன்ற கருத்துக்கள் இல்லை என்றால் இதுபோன்ற ""அறநெறிகள்"" வெளிவர வாய்ப்பில்லை. இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். An object will not change its motion unless a force acts on it // ...... 'அறநெறியாளர்கள்' பலர் எப்போதும் போல் சாமியார்களையே குறி வைப்பவர்கள், .....//...
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
29-செப்-202118:13:55 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் மனநிலை பாதிக்கப்படாதவர் என்று தெரிய வந்துள்ளது அவர்கள் மதத்தின் மீது அவர்களுக்கே பற்றுதல் குறைந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X