பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் அக்.,2ல் கிராம சபை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கரூர்: அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடக்கும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதை தவிர, மற்ற கிராம பஞ்சாயத்துகளில், காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராமசபை கூட்டம் நடக்கிறது. இதில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கொரோனா குறித்து

கரூர்: அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடக்கும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதை தவிர, மற்ற கிராம பஞ்சாயத்துகளில், காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராமசபை கூட்டம் நடக்கிறது. இதில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X