சுகாதார சீர்கேட்டில் கலெக்டர் அலுவலக கழிப்பிடம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கீழ்தளத்தில் உள்ள கழிப்பிடம் பெரும் சுகாதார சீர்கேட்டில் உள்ளது. இதனால் பொது மக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் - வெள்ளியணை சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், கீழ்தளத்தில் பி.ஆர்.ஓ., அலுவலகம் அருகில் பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வசதிக்காக கழிப்பிடம்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கீழ்தளத்தில் உள்ள கழிப்பிடம் பெரும் சுகாதார சீர்கேட்டில் உள்ளது. இதனால் பொது மக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.


கரூர் - வெள்ளியணை சாலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், கீழ்தளத்தில் பி.ஆர்.ஓ., அலுவலகம் அருகில் பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, கழிப்பிடம் சரிவர சுத்தம் செய்யப்படாததால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கழிப்பிடத்துக்குள் செல்ல முடியாமல், கலெக்டர் அலுவலகத்தில் கீழ் தளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில், மனுக்களை போட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுகாதார சீர்கேட்டால், மனு கொடுக்க செல்லும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தின் கீழ்தளத்தில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X