பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு நீதிமன்றத்தில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஈரோடு: ஊரடங்கு உத்தரவு விதி மீறிய வழக்கில், அமைச்சர் முத்துசாமி, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். கொரோனா பரவல் தாக்கம் உச்சத்தில் இருந்த, 2020 டிச.,?ம் தேதி, ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணம், தி.மு.க., சார்பில் ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ப.செ.பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊரடங்கு அமலில்

ஈரோடு: ஊரடங்கு உத்தரவு விதி மீறிய வழக்கில், அமைச்சர் முத்துசாமி, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். கொரோனா பரவல் தாக்கம் உச்சத்தில் இருந்த, 2020 டிச.,?ம் தேதி, ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணம், தி.மு.க., சார்பில் ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ப.செ.பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊரடங்கு அமலில் உள்ள போது, சமூக இடைவெளியின்றி பொது இடத்தில் கூடியதாக, முத்துசாமி உள்ளிட்ட, 10 பேர் மீது டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணைக்காக, ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண்.1ல், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று காலை ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வடிவேல், அக்.,12ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். அமைச்சர் வருகையால், நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X