பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் கோரைப்புல் அறுவடை பாதிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், கோரைப்புல் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறைந்த சாகுபடி செலவு, அதிக நாட்களுக்கு அறுவடை, மழை இல்லாத காலத்திலும் தொடர்ந்து வளரும் தனித்தன்மை, நீண்ட கால வருமானம் உள்ளிட்ட காரணங்களால் கோரைப்புல்

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில், கோரைப்புல் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறைந்த சாகுபடி செலவு, அதிக நாட்களுக்கு அறுவடை, மழை இல்லாத காலத்திலும் தொடர்ந்து வளரும் தனித்தன்மை, நீண்ட கால வருமானம் உள்ளிட்ட காரணங்களால் கோரைப்புல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் அருகே நெரூர், செவிந்திப்பாளையம், ஒத்தக்கடை, பஞ்சமாதேவி, மறவாப்பாளையம், கோயம்பள்ளி, புதுப்பாளையம், வாங்கல், திருமாக்கூடலூர், கடம்பங்குறிச்சி, அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் பாய்கள், வீட்டு அலங்கார பொருட்கள், கூடைகள், இருக்கைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கரூர் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கோரைப்புல்லை அறுவடை செய்து, காயவைத்துதான் பாய் உற்பத்தி செய்ய முடியும். மழையால், கோரைப்புல்லை காய வைக்க முடியவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், வாழையை அடுத்து கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது. கோரைப்புல்லை மழைக்காலங்களில் அறுவடை செய்ய முடியாது. தீபாவளி பண்டிகைக்கு ஒன்றரை மாதமே உள்ளதால், கோரைப்பாய்க்கு ஆர்டர் நிறைய வந்துள்ளது. ஆனால் மழை பெய்து வருவதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரைப்புல்லுக்கு விலை குறைந்து வருகிறது. 16 இன்ச் கொண்ட கோரைப்புல் ஒரு கட்டு, 1,500 ரூபாய் வரை விலை போனது. தற்போது, 600 முதல் 900 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X