பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மந்தம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக பொம்மை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்தனர்.நவராத்திரி விழா வரும் அக்., 7ல் துவங்குகிறது. இதையொட்டி நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் தயாரிப்பு பணி, கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில் மும்முரமாக நடக்கிறது. இங்கு, சொர்க்கவாசல் திறப்பு, ராமாயணம், விஸ்வரூப தரிசனம், காஞ்சி தங்க ரதம்,

கிருஷ்ணகிரி: கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக பொம்மை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்தனர்.


நவராத்திரி விழா வரும் அக்., 7ல் துவங்குகிறது. இதையொட்டி நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் தயாரிப்பு பணி, கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில் மும்முரமாக நடக்கிறது. இங்கு, சொர்க்கவாசல் திறப்பு, ராமாயணம், விஸ்வரூப தரிசனம், காஞ்சி தங்க ரதம், அஷ்ட பைரவர், பிரம்ம உற்சவம், மைசூர் தசரா, சப்த கன்னிகள், சீதா கல்யாணம் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட செட்டுகளை களிமண்ணால் தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு செட், 200 முதல் அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, கொலு பொம்மை தயாரிப்பாளர்கள் கூறுகையில், 'இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளை வாங்க, சென்னை, பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து மக்கள் வருவது வழக்கம். கொரோனா பரவலால், கேரளாவிலிருந்து இந்த ஆண்டு யாரும் வரவில்லை. பெங்களூரு, சென்னையிலிருந்து ஒரு சிலர் வந்து செல்கின்றனர். கொலு வைப்போர் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், கொரோனா கட்டுப்பாடுகளாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை மந்தமாகவே உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X