எனக்கு மாரடைப்பில்லை: பாக்., கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விளக்கம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.பாகிஸ்தான் அணி கடந்த 1992ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அப்போது அந்த அணியில் இன்சமாம் உல் ஹக் இடம் பெற்றிருந்தார். தற்போது 51 வயதான இன்சமாம் உல் ஹக், 375
Did not suffer, Heart Attack, Routine CheckUp, Inzamam, Pak Cricketer, Pakistan Cricketer, எனக்கு மாரடைப்பில்லை, பாகிஸ்தான், கிரிக்கெட் அணி, முன்னாள் கேப்டன், இன்சமாம் உல் ஹக்,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தான் அணி கடந்த 1992ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அப்போது அந்த அணியில் இன்சமாம் உல் ஹக் இடம் பெற்றிருந்தார். தற்போது 51 வயதான இன்சமாம் உல் ஹக், 375 ஒருநாள் போட்டிகளில் 11,701 ரன்களும், 119 டெஸ்ட் போட்டிகளில் 8,829 ரன்களும் சேர்த்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இன்சமாம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். பேட்டிங் ஆலோசகர், தேர்வுக்குழுத் தலைவராக கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டுவரை இருந்தார்.


latest tamil news


ஆப்கானிஸ்தான் அணிக்கான பயிற்சியாளராகவும் இன்சமாம் உல் ஹக் செயல்பட்டார். இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதால் அதிர்ச்சிக்கு உள்ளான அவரது ரசிகர்கள் பலரும், அவர் விரைவில் குணம் பெற வேண்டுமென சமூகவலைதளங்களில் வேண்டுதல்களை பதிவிட்டனர். இந்நிலையில் இன்று இன்சமாம் உல் ஹக் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'பாகிஸ்தானிலும் உலகின் மற்ற நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்ததற்கு நன்றி. பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் நான் பூரண குணம் பெற வேண்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளீர்கள். அதற்கும் நன்றி.

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. நான் எனது வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றேன். அங்கே எனக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்தனர். அதில், எனது இதயத்துக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறினர். அதனால் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. நான் 12 மணி நேரத்தில் வீடு திரும்பிவிட்டேன். சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நான் இப்போது நலமாக இருக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202112:57:50 IST Report Abuse
NicoleThomson .. மாரடைப்பு வருமா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-செப்-202119:49:59 IST Report Abuse
Ramesh Sargam அதான பார்த்தேன், இதயமே இல்லாதர்வர்களுக்கு மாரடைப்பு எப்படி வரும்??? வேற ஏதோ அடைத்துக்கொண்டிருக்கு.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
29-செப்-202118:01:54 IST Report Abuse
mathimandhiri ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் இப்படி ஆப்கன் பயங்கரவாதி போல் தோற்றம் கொடுப்பது கேவலமாக உள்ளது/////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X