வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை| Dinamalar

'வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை'

Added : செப் 29, 2021
Share
பாலக்காடு : வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்தார்.கோவை - பாலக்காடு எல்லையில் வாளையார் விற்பனை வரி சோதனை சாவடியை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், சோதனை சாவடிகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. சரியான வரி கட்டினாலே வரி வருவாய் அதிகரிக்கும்.
 'வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை'

பாலக்காடு : வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்தார்.
கோவை - பாலக்காடு எல்லையில் வாளையார் விற்பனை வரி சோதனை சாவடியை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், சோதனை சாவடிகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. சரியான வரி கட்டினாலே வரி வருவாய் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி.,க்கு முன்னால் ஒவ்வொரு ஆண்டும் 14 முதல் 16 சதவீதம் வரை வரி வருவாய் அதிகரித்தது.ஆனால் ஜி.எஸ்.டி., அமல்படுத்தி நான்காண்டு கடந்தும் வருவாயில் எந்தவித உயர்வும் இல்லை.
கேரளாவில் இருந்து வெளியே செல்லும் சரக்குகளை கண்காணிக்க கேமரா பொருத்தப்படும். வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரி வருவாயை உயர்த்த தணிக்கை நுண்ணறிவு அமைப்பை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X