இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட்
NEET, Supreme Court, Petition, Seeking, Cancellation, Students, நீட், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், நீட் தேர்வு, ரத்து, மனுத்தாக்கல்

புதுடில்லி: உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு செப்டம்பர் 12ம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு முன்னதாக உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து, செப்.,12ல் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


அந்த மனுவில், ‛நீட் வினாத்தாளை பயிற்சி மையங்களில் முன்கூட்டியே வழங்கி முறைகேடு நடந்துள்ளது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது. நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட கருவிகள் பொருத்த உத்தரவிட வேண்டும்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
29-செப்-202120:06:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கல்லூரி நடத்தும் கனவான் கட்சிகாரர்கள் சீட்டுக்கு பணம்பெற்றுக்கொண்டு விட்டார்களோ.கொள்ளை அடிப்பவர்களுக்கு என்னத்தான்சொன்னாலும் எடுபடபோவதில்லை அவரக்ளுக்கு திருட்டுவழியில் பணம்ஈட்டமட்டுமேதெரியும்பொதுநலன்பற்றிய கவலை அவர்களுக்கு ஏதும் இல்லை..
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
29-செப்-202119:57:33 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கல்லem
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
29-செப்-202117:29:28 IST Report Abuse
ஆனந்த் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் ஏக முறைகேடுகள் .. ஆகவே உரிமம் பெற தேர்வு இருக்கவே கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X