கொள்கையில் சமரசம் செய்ய மாட்டேன்: சித்து

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சண்டிகர்: எனது கொள்கையில் சமரசம் செய்ய மாட்டேன் என, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய சித்து கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தின் நலனுக்கு உகந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு மோதல் இல்லை. எனது 17 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், மக்களின் வாழ்க்கை சிறக்கவும், மாற்றம்
sidhu, congress, cong, navjotsinghsidhu, சித்து, காங்கிரஸ், பஞ்சாப்,

சண்டிகர்: எனது கொள்கையில் சமரசம் செய்ய மாட்டேன் என, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய சித்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தின் நலனுக்கு உகந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு மோதல் இல்லை. எனது 17 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், மக்களின் வாழ்க்கை சிறக்கவும், மாற்றம் ஏற்படுத்தவும் அர்ப்பணித்தேன். எனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மேலிடத்தின் உத்தரவை என்னால் மறுக்க முடியாது. அவர்களை கைவிடவும் முடியாது.


latest tamil news


பஞ்சாப் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு நீண்ட காலமாக போராடி வருகிறேன். ஒரு காலத்தில் ஊழல் தலைவர்கள், அதிகாரிகள் இருந்தனர். இனியும் அதே நிலை தொடரக்கூடாது. எனது கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன். மாநிலத்திற்காக எதையும் இழக்க தயாராக உள்ளேன். உண்மைக்காக எனது போராட்டம் தொடரும். எனது இறுதி மூச்சு உள்ளவரை இருக்கும். இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202123:32:37 IST Report Abuse
Aarkay அப்படி என்ன உங்கள் கொள்கை என சொல்வீர்களா? பதவிக்காக கட்சி கட்சியாக தாவுவதுதானே உங்கள் கொள்கை சித்து?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-செப்-202122:28:32 IST Report Abuse
Ramesh Sargam இவனுக்கெல்லாம் ஒரு கொள்கை, இவனெல்லாம் கொள்கையை பத்தி பேசறான்...
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
29-செப்-202120:19:22 IST Report Abuse
SUBBU இவன் எந்த கட்சியில் இருந்தாலும் அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டே இருப்பான்.பாகிஸ்தான் மேல் பாசம் வைத்திருக்கும் இவன் ஒரு பச்சை துரோகி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X