பொது செய்தி

தமிழ்நாடு

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.8 கோடி அதிகரிப்பு: காந்தி

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை : 'கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வேலை நேரம் மாற்றப்பட்டதால் விற்பனை அதிகரித்துள்ளது' என, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.அமைச்சர் அறிக்கை:இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா காரணமாக, கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படவில்லை. கைத்தறி ரகங்கள் தேக்கமடைந்து, ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரம் குறைந்தது.தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து,

சென்னை : 'கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வேலை நேரம் மாற்றப்பட்டதால் விற்பனை அதிகரித்துள்ளது' என, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிக்கை:
இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா காரணமாக, கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படவில்லை. கைத்தறி ரகங்கள் தேக்கமடைந்து, ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரம் குறைந்தது.தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. விற்பனை நிலையங்கள் செயல்படத் துவங்கி உள்ளன.
கோ - ஆப்டெக்ஸ் என்பது வணிக நிறுவனம். எனவே, தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு விற்பனையை அதிகரிக்க, பல்வேறு உத்திகளை கையாள வேண்டி உள்ளது.அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 105 விற்பனை நிலையங்களில், மாநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் செயல்படும், 64 விற்பனை நிலையங்களின் அலுவல் நேரம், காலை 10:30 முதல் 1:30 மணி வரை; மதிய உணவு இடைவேளைக்கு பின், மாலை 4:00 முதல், இரவு 9:00 மணி வரை மாற்றம் செய்யப்பட்டது.
அலுவல் நேரம் எட்டு மணி நேரம் என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை.இது தவிர, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, கோ - ஆப்டெக்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 19.63 கோடி ரூபாய் விற்பனை நடந்தது. இந்த ஆண்டு 27.33 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 7.70 கோடி ரூபாய் விற்பனை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X