சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கீழ்மொணவூரில் இரண்டு பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய

வேலுார்: வேலுார் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கீழ்மொணவூரில் இரண்டு பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரியூரை சேர்ந்த ராஜா, 25, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வசந்த், 21, என்பதும் ரவுடிகளான அவர்கள் வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து வேலுார் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X