பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி அவசியம் கிராம சபாவில் விழிப்புணர்வு

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர் : தமிழகம் முழுதும் அக்., 2ல் நடக்கும் கிராமசபா கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும், ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள, 28 மாவட்டங்களில் வரும் அக்., 2ல் கிராமசபா கூட்டம் நடக்கிறது. மக்கள் தொகை அடிப்படையாக கொண்டு திறந்தவெளியில் கூட்டம் நடத்த

திருப்பூர் : தமிழகம் முழுதும் அக்., 2ல் நடக்கும் கிராமசபா கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும், ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள, 28 மாவட்டங்களில் வரும் அக்., 2ல் கிராமசபா கூட்டம் நடக்கிறது. மக்கள் தொகை அடிப்படையாக கொண்டு திறந்தவெளியில் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும் இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஆறடி இடைவெளி விட்டு, கட்டாயம் முககவசம் அணிந்து தான் வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும் அக்., 3ம் தேதி, நான்காம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2ல் நடக்கும் கிராம சபா கூட்டத்தில், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம், நன்மைகள், கொரோனா, டெங்கு வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரக்குழுவினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X