பொது செய்தி

தமிழ்நாடு

20 மாதங்களுக்கு முன்பு மின் வேலியில் சிக்கி பலியான பெண் யானையை தேடி அலையும் ஒற்றை ஆண் யானை

Added : செப் 29, 2021
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, 20 மாதங்களுக்கு முன்பு மின் வேலியில் சிக்கி பலியான பெண் யானை புதைக்கப்பட்ட இடத்தை ஒற்றை ஆண் யானை தேடி அலைவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.தமிழக- ஆந்திரா மாநில எல்லையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மத்தேட்டிபல்லி, படி கும்மிடிபட்டி, மோர்த்தனா, தோரணமலை ஆகிய பகுதிகளில் ஒற்றை ஆண் யானை


குடியாத்தம்: குடியாத்தம் அருகே, 20 மாதங்களுக்கு முன்பு மின் வேலியில் சிக்கி பலியான பெண் யானை புதைக்கப்பட்ட இடத்தை ஒற்றை ஆண் யானை தேடி அலைவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழக- ஆந்திரா மாநில எல்லையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மத்தேட்டிபல்லி, படி கும்மிடிபட்டி, மோர்த்தனா, தோரணமலை ஆகிய பகுதிகளில் ஒற்றை ஆண் யானை கடந்த சில நாட்களாக சுற்றிக் கொண்டிருக்கிறது. போகும் வழியில் உள்ள நிலங்களை நாசம் செய்தும், வீடுகளை சேதப்படுத்திக் கொண்டும் பிளறிக் கொண்டு வேகமாக செல்கிறது. தகவல் அறிந்த குடியாத்தம் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்த போது அது ஒரு இடத்தை தேடி வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறையினர் இன்று கூறியதாவது: ஆந்திரா மாநிலத்தில் இருந்து குடியாத்தம் பகுதிக்குள் யானைகள் வந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பலர் திருட்டுத்தனமாக தங்கள் நிலத்தில் மின்சார வேலி அமைத்திருந்தனர். மத்தேட்டி பல்லி அருகே குடிமிபட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி 20 மாதங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று இறந்தது. அந்த யானையை அந்த இடத்திலேயே புதைத்து விட்டனர்.

இறந்த பெண் யானையும், ஒற்றை ஆண் யானையும் முன்பு ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது வழி தவறி பெண் யானை சென்று விட்டது. இதனால் அதை தேடிக் கொண்டு ஒற்றை யானை சென்றது. தற்போது பெண் யானை இறந்து விட்டதை அறிந்து கொண்ட ஒற்றை யானை அது புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிய தேடிக் கொண்டிருக்கிறது.

யானைக்கு மோப்ப சக்தியும், ஞாபக சக்தியும் அதிகம் என்பதால் இந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் வரை ஓயாது. எனவே இரவு நேரத்தில் இப்பகுதியில் வயலுக்கு செல்லும் விவசாயிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஒற்றை யானையிடம் சிக்கினால் அடித்தே கொன்று விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X