அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையது: அண்ணாமலை

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (78)
Share
Advertisement
திருநெல்வேலி: ‛‛பொதுமக்களுக்கான திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசுடையது தான்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியில் பா.ஜ., அ.தி.மு.க.,
BJP, Annamalai, LocalBody Election, பாஜக, பாஜ, அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தல், மத்திய அரசு, திட்டங்கள்

திருநெல்வேலி: ‛‛பொதுமக்களுக்கான திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசுடையது தான்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியில் பா.ஜ., அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் குடிநீர் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீர் கிடைத்திடவும் பிரதமர் மோடி வழங்கும் திட்டங்கள் நேரடியாக கிடைத்திடவும் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.


latest tamil news


ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது தி.மு.க.,வின் வழக்கமாக உள்ளது. மத்திய அரசு திட்டத்தில் அவர்களுடைய போட்டோ ஒட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், மத்திய அரசின் திட்டத்தை லஞ்சமின்றி பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசுடையதுதான், மாநில அரசுடையது அல்ல. தி.மு.க., தேர்தலுக்கு முன் சொன்னது ஒன்று தற்போது செய்வது வேறு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-செப்-202122:36:27 IST Report Abuse
தமிழவேல் மத்திய அரசுக்கு யாரிடமிருந்து இதற்கு பணம் வருகின்றது ? இந்தியாவில் மிக அதிகமாக எந்தெந்த மாநிலம் வரியாக மத்திய அரசிற்கு கட்டுகின்றன ?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-செப்-202122:33:02 IST Report Abuse
தமிழவேல் அப்போ, மக்கள் நலத் திட்டம்னு இலவசமா குடுத்து சோம்பேறியாக்குறதும் மத்திய அரசு தானா ?
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
29-செப்-202121:10:53 IST Report Abuse
Naresh Giridhar மாநில மக்களின் சம்பாத்தியத்தை பல வித வரிகளாக சூறையாடிவிட்டு , GST என்று ஒன்றை போட்டு , மாநில பணத்தையம் பறித்து , ஒன்றிய அரசின் திட்டங்கள் என்று சொல்ல வாய் கூசலயா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X