கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை: ஊழல் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழக்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கடந்த, 1991 - 1996ல், தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர், இந்திராகுமாரி. அப்போது, வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இரண்டு அறக்கட்டளைகளை, அவரது கணவர் பாபு துவங்கி
ஊழல், இந்திரகுமாரி, குற்றவாளி, அதிமுக, சிறை,திமுக

சென்னை: ஊழல் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழக்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த, 1991 - 1996ல், தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர், இந்திராகுமாரி. அப்போது, வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இரண்டு அறக்கட்டளைகளை, அவரது கணவர் பாபு துவங்கி உள்ளார். அந்த இரண்டு அறக்கட்டளைகளுக்கும், 15.45 லட்சம் ரூபாயை, சமூக நலத்துறை ஒதுக்கியுள்ளது. அந்த தொகை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும், சமூக நலத்துறைக்கு எந்த நோட்டீசும் கொடுக்காமல், இரண்டு அறக்கட்டளைகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக, சமூக நலத்துறை செயலர் லட்சுமி பிரனேஷ் அளித்த புகாரில், இந்திராகுமாரி, அவரது கணவர் உட்பட, ஐந்து பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


latest tamil news




இந்த வழக்கில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்திராகுமாரி, பாபுவுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு குற்றவாளியான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.

மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருபாகரன் என்பவர் இறந்த நிலையில், வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்பட்டார்.
இந்திரகுமாரி தற்போது தி.மு.க., மாநில இலக்கிய அணி செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


நெஞ்சுவலி


latest tamil news



தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-செப்-202123:39:15 IST Report Abuse
DARMHAR ரொம்ப தெனாவட்டாக திமிர் பிடித்து நடந்ததால் தான் இந்த கதி இப்படிப்பட்ட ஜென்மங்கள் எந்த சிறை வாழ்க்கைக்குப்பிறகும் திருந்துவது என்பது கடினம். ஜென்மத்தில் பிறந்த குணம் அடித்தாலும் போகாது என்ற சொலவடை ஒன்று உண்டு.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202123:11:32 IST Report Abuse
Aarkay சிறைத்தண்டனை என்றதும் இவர்களுக்கு நெஞ்சுவலி வருவதன் மர்மம்தான் புரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு என்ன ஒரு போஸ் பாருங்கள். சிவாஜிக்கே நடிப்பை கற்றுக்கொடுப்பார் போல...
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
29-செப்-202122:03:22 IST Report Abuse
mrsethuraman  மறுவாழ்வு தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றியவர்கள் இப்போது தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்று தவிக்கிறார்கள் .முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X