தேர்தல் பிரசாரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பிரசாரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021
Share
வேலுார்: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில், சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் இறந்து போயினர். தற்போது 3வது அலை வரும் என சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்
தேர்தல் பிரசாரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்

வேலுார்: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில், சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் இறந்து போயினர். தற்போது 3வது அலை வரும் என சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பது, வாகன பிரசாரம் செய்வது என கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


இதற்காக அதிகளவு கூட்டம் சேர்க்கப்படுகிறது. இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் கொரோனா விதிகளை யாரும் பின்பற்றாமல் கூட்டமாக சேருகின்றனர். ஓட்டையே குறிக்கோளாக கொண்டுள்ள அரசியல் கட்சியினர் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மெல்ல அதிகரித்துக் கொண்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறிதாவது: உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியும், சுயேட்சை வேட்பாளர்களும் கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் கூட்டம் சேர்க்கின்றனர். இதனால் கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர், மாவட்ட நிர்வாகம் கட்சியினர் நடத்தும் கூட்டங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்க அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X