கோவில் விளக்கால் தீக்காயமடைந்த சிறுமி பலி

Added : செப் 29, 2021
Share
Advertisement
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கப்படையைச் சேர்ந்த வேல்முருகனுக்கு தெய்வவெனுசியா, 6; தெய்வ கனுசியா, 4, ஆகிய இரண்டு மகள்கள். கடந்த 21ம் தேதி, வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில், தெய்வ வெனுசியா தரிசனம் முடித்து வெளியே வந்தார்.கோவில் விளக்கில், அவரது கவுன் துணி பட்டதால் தீப்பற்றிக் கொண்டது. பிளாஸ்டிக் வேலைப்பாடுகளுடன் கூடிய
 கோவில் விளக்கால்  தீக்காயமடைந்த சிறுமி பலி


துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கப்படையைச் சேர்ந்த வேல்முருகனுக்கு தெய்வவெனுசியா, 6; தெய்வ கனுசியா, 4, ஆகிய இரண்டு மகள்கள். கடந்த 21ம் தேதி, வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில், தெய்வ வெனுசியா தரிசனம் முடித்து வெளியே வந்தார்.கோவில் விளக்கில், அவரது கவுன் துணி பட்டதால் தீப்பற்றிக் கொண்டது. பிளாஸ்டிக் வேலைப்பாடுகளுடன் கூடிய கவுன் என்பதால், தீப்பற்றியதும் சிறுமியின் உடலில் ஒட்டிக் கொண்டது. அலறியபடி வீட்டுக்கு ஓடினார்.தாய் மதிவதனா, சிறுமி மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். தீக்காயத்துடன் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி நேற்று இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X