சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 மாத குழந்தை கடத்தல்! போலீசார் விசாரணை தீவிரம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 35; ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 27. இவர்களுக்கு, ஐந்து மாத பெண் குழந்தை உட்பட, 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 35; ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 27. இவர்களுக்கு, ஐந்து மாத பெண் குழந்தை உட்பட, 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கி துணி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, (28ம் தேதி) இரவு, 9:30 மணிக்கு ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் மணிகண்டன் உணவு வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது, சங்கீதா குழந்தைகளை வைத்து அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர், குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக பணம் கொடுத்து, குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி ஐந்து மாத குழந்தையை கையில் வாங்கிக்கொண்டார். அப்போது, சங்கீதா உணவு வாங்க அருகில் சென்ற போது, அந்த நபர் மற்றொருவருடன் பைக்கில் பொள்ளாச்சி நோக்கி குழந்தையை கடத்திச் சென்றார். ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், ஆனைமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X