பொது செய்தி

இந்தியா

ஆப்கனுக்கு விமான சேவை: இந்தியாவுக்கு தலிபான்கள் கோரிக்கை

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கனுக்கு விமான சேவையை துவக்க வேண்டும் என தலிபான்கள், இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் துவங்கியதும் கடந்த ஆக., 15ம் தேதி ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவைகளை நிறுத்தின. 15ம் தேதிக்கு முன்னரே, இந்தியாவும் விமான சேவையை நிறுத்தியிருந்தது.காபூல்
afghanistan, taliban, plane, dgca, ஆப்கன், தலிபான்கள், விமான சேவை,

புதுடில்லி: ஆப்கனுக்கு விமான சேவையை துவக்க வேண்டும் என தலிபான்கள், இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் துவங்கியதும் கடந்த ஆக., 15ம் தேதி ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவைகளை நிறுத்தின. 15ம் தேதிக்கு முன்னரே, இந்தியாவும் விமான சேவையை நிறுத்தியிருந்தது.

காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம், ஆக.,30ம் தேதி அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. இதனை தொடர்ந்து, காபூலுக்கு சர்வதேச மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கு தயாராக உள்ளதாகவும், முன்பு போல் விமானங்களை இயக்க வேண்டும் என தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.


latest tamil news


இந்நிலையில், ஆப்கனுக்கு பயணிகள் விமான சேவையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுக்கு தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதம் தற்போது, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202123:54:19 IST Report Abuse
Aarkay இவர்களுக்குத்தான் சீனாவும், பாக்கியும் உள்ளனரே அவர்களுடன் கொஞ்சி குலாவட்டும்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202123:35:41 IST Report Abuse
Aarkay எதற்காக? தீவிரவாதிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்யவா? ஆளை விடுங்க இங்கேயிருக்கும் கூலிபாண்ஸை சமாளிக்கவே முடியவில்லை. இன்னும் உங்கள் தலைவலி வேறு தேவையா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-செப்-202120:37:37 IST Report Abuse
Ramesh Sargam இந்தியா விமான சேவையை இன்னும் சிறிது காலத்திற்கு துவங்க கூடாது.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202123:36:44 IST Report Abuse
Aarkayஎப்பவுமே தீவிரவாதிகளுடன் எந்த பரிவர்தனையும் தேவையில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X