பொது செய்தி

தமிழ்நாடு

சேலம், தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛சேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இன்று செப்., 29ம் தேதி: தென்மேற்கு பருவகாற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்
சேலம், தர்மபுரி, கனமழை, தமிழகம், வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு,

சென்னை: ‛‛சேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இன்று செப்., 29ம் தேதி: தென்மேற்கு பருவகாற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


latest tamil news


நாளை செப்.,30ம் தேதி: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அக்.,1ம் தேதி: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


latest tamil news


அக்., 2ம் தேதி: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்., 3 ம் தேதி: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு (சென்டி மீட்டரில்):


பந்தலுார் (நீலகிரி) 5 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை), இரணியல், நாகர்கோவில், பேச்சிப்பாறை, குழித்துறை (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), வால்பாறை (கோவை), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ., மணல்மேடு (மயிலாடுதுறை), பெரியாறு (தேனி), குளச்சல் (கன்னியாகுமரி), ஓமலுார் (சேலம்), ஏத்தாப்பூர் (சேலம்)தலா 1 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:


இன்று 29 ம் தேதி: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X