அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெ.,வை போல செயல்படும் ஸ்டாலின்: செல்லூர் ராஜூ புகழாரம்

Added : செப் 29, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: ரவுடிகளை ஒடுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை
ADMK, Sellur Raju, Rowdies, Jayalalitha, Stalin, DMK, CM, அதிமுக, செல்லூர் ராஜூ, ரவுடி, ஜெயலலிதா, ஸ்டாலின்

சென்னை: ரவுடிகளை ஒடுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை தண்ணீர், குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news


கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆனால், டெண்டர்களை தற்போது ரத்து செய்துவிட்டனர். அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202106:51:40 IST Report Abuse
ராஜா அவர் வைகை அணையில் டெர்மகோல் விட்டவருங்க. அவர் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202106:42:15 IST Report Abuse
Mani . V இந்திரகுமாரி நிலை கண் முன்னே வந்து போகுமா இல்லையா?
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
29-செப்-202123:53:51 IST Report Abuse
DARMHAR தெர்மாகோல் விஞ்ஞானிக்கு தெரியாதா எந்த பக்கம் காற்று அடிக்குதோ அந்த பக்கம் தான் நல்லதென்று.?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X