பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம்| Dinamalar

பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள்: உச்சநீதிமன்றம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: பட்டாசு தயாரிப்பில் கடுமையான முறையில் விதிகள் மீறப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.காற்று மாசை ஏற்படுத்துவதால், பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கை நீதிபதிகள், எம்.ஆர். ஷா, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பட்டாசு உற்பத்தி
உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், பட்டாசு,

புதுடில்லி: பட்டாசு தயாரிப்பில் கடுமையான முறையில் விதிகள் மீறப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

காற்று மாசை ஏற்படுத்துவதால், பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரும் வழக்கை நீதிபதிகள், எம்.ஆர். ஷா, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்திருப்பதாக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது.


latest tamil news



இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சிவகாசியில் 4 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்திய பட்டாசு ஆலைகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? அந்த ஆலைகளுக்கு எதிராக சி.பி.ஐ., ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது?

சி.பி.ஐ., வழங்கி உள்ள முதல்கட்ட அறிக்கையில், பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதை பார்க்கிறோம். பட்டாசு தயாரிப்பு விதிமீறல் தொடர்பான முழு அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X