சிங்கப்பூரில் மக்கள் தொகை 4.1% சரிவு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சிங்கப்பூர்: ‛சிங்கப்பூர் மக்கள் தொகை கடந்த ஆண்டை ஜூன் நிலவரப்படி 4.1 சதவீதம் குறைந்துள்ளது' என்று அந்நாடு வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் கொரோனா காரணமாக பொருளாதாரம் மந்தமாகவே நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர், மக்கள் தொகை, 4.1% குறைவு, அரசு அறிக்கை

சிங்கப்பூர்: ‛சிங்கப்பூர் மக்கள் தொகை கடந்த ஆண்டை ஜூன் நிலவரப்படி 4.1 சதவீதம் குறைந்துள்ளது' என்று அந்நாடு வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா காரணமாக பொருளாதாரம் மந்தமாகவே நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருடாந்திர மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.


latest tamil news


அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிங்கப்பூரின் மக்கள்தொகை 1970ம் ஆண்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை கடந்த ஆண்டை விட 4.1 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்துள்ளது.

மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைந்தும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. சிங்கப்பூரின் தற்போதைய மக்கள்தொகை 59 லட்சம் ஆகும். மக்கள் தொகை சரிவைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundara Raman - bengaluru,இந்தியா
30-செப்-202105:24:18 IST Report Abuse
Sundara Raman இந்த மாதிரி இந்தியாவில் ஜனத்தொகை கணக்கெடுத்தால் அது நிச்சயம் அதிகரித்திருக்கும். கரோனவாகட்டும், கோவிடாகட்டும், உற்பத்திக்கு இந்தியாவில் ஒரு குறைவுமில்லை...................
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
30-செப்-202105:10:16 IST Report Abuse
vns தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் மக்கள் தொகை 60 லக்ஷத்தை விட அதிகமாக இருக்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-செப்-202123:21:09 IST Report Abuse
Kasimani Baskaran முன்னர் போல நிரந்தர வாசம் மற்றும் குடியுரிமை அவ்வளவு எளிதில் கொடுக்கப்படுவது இல்லை. ஐந்திலக்க சம்பளம் என்றால் ஓரளவுக்கு சாத்தியம். தவிரவும் கோவிட்19 காரணமாக பலர் சொந்த நாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். இப்பொழுதைக்கு கிடைக்கும் மனிதவளத்தை விட வேலைகள் அதிகம். பல நிறுவனங்கள் ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X