இந்தியாவின் உயரிய கருத்தாக்கத்தை பிரதமர் தகர்க்கிறார்: ராகுல் விமர்சனம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
திருவனந்தபுரம்: '‛இந்தியர்களிடையே உள்ள நல்லுறவை உடைத்து, இந்தியாவின் உயரிய கருத்தாக்கத்தை பிரதமர் மோடி தகர்க்கப்பார்க்கிறார்,'' என, காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.கேரளாவின் மலப்புரத்தில் இன்று டயாலிசிஸ் மையத்தை தொடங்கி வைத்த காங்., எம்.பி., ராகுல் பேசியதாவது: இந்தியா வெறும் புவியியல் எல்லைகளை கொண்ட நாடு மட்டும் அல்ல. இந்திய மக்கள் அனைவரும் சாதி, மதங்களைக்
PM Modi Breaking Idea of India, My Job is to Bridge Gap, Rahul Gandhi, இந்தியாவின் கருத்தாக்கம், பிரதமர் தகர்க்கிறார், ராகுல் விமர்சனம், ராகுல் காந்தி, பிரதமர் மோடி,

திருவனந்தபுரம்: '‛இந்தியர்களிடையே உள்ள நல்லுறவை உடைத்து, இந்தியாவின் உயரிய கருத்தாக்கத்தை பிரதமர் மோடி தகர்க்கப்பார்க்கிறார்,'' என, காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

கேரளாவின் மலப்புரத்தில் இன்று டயாலிசிஸ் மையத்தை தொடங்கி வைத்த காங்., எம்.பி., ராகுல் பேசியதாவது: இந்தியா வெறும் புவியியல் எல்லைகளை கொண்ட நாடு மட்டும் அல்ல. இந்திய மக்கள் அனைவரும் சாதி, மதங்களைக் கடந்து, ஒருவருக்கொருவர் நல்லுறவை பேணிக்காத்து வருகின்றனர். இந்திய மக்களிடையே உள்ள இந்த நல்லுறவை பிரதமர் மோடி உடைக்கிறார். இதனால் நாட்டின் உயரிய கருத்தாக்கம் தகர்க்கப்படுகிறது.


latest tamil news


இந்தியா வெறும் ஒரு நாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தியா என்பது மக்கள், அவர்களின் உறவுகள் என நாங்கள் சொல்கிறோம். இது இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கியர்களுக்கு இடையேயான உறவு. தமிழ், இந்தி, உருது, வங்காளி ஆகியவற்றுக்கு இடையேயான உறவு. பிரதமர் இந்த உறவுகளை உடைக்க பார்க்கிறார்; அதற்கு அவர் வெறுப்பைப் பயன்படுத்துகிறார். அந்த பிளவை அன்பை கொண்டு மீண்டும் கட்டமைப்பதே எனது வேலை.

நாட்டில் பல்வேறு மரபுகள், கருத்துக்கள், பல்வேறு மதங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் ஆகியவற்றை புரிந்து கொள்ளாமல் என்னால் அதை கட்டியெழுப்ப முடியாது. அவர் உறவை முறிக்க பார்க்கும் அதே சமயத்தில், இந்தியர்களுக்கு இடையே பாலத்தை கட்டியெழுப்புவதை எனது கடமையாகவும், வேலையாகவும் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
01-அக்-202110:16:50 IST Report Abuse
mathimandhiri ஆழ்ந்த கருத்துக்கள்/////அறிவார்ந்த பேச்சு /////பாரத நாட்டின் ஆணி வேராகிய கலாச்சாரத்தை இவரை விட ஆழமாகவும் அகலமாகவும் எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை/////டாக்டர் .ராதா கிருஷ்ணன்,,மஹாகவி தாகூர், வீரத்துறவி விவேகானந்தர் இன்னும் இது போன்றோரின் அறிவும் ஆற்றலும் ஒரே இடத்தில் பிழிந்தெடுத்து செறிந்த நம் ரவுல்ஜி , அன்னையார் அவர்கள் பாரதத்துக்கு அளித்த மாபெரும் நன் கொடை யாவார்//////நினைக்க நினைக்க மனம் புல்லரித்துப் போகிறது////////வீம்பு செய்வதை விட்டு விட்டு மத்திய அரசு உடனே எம் தலைவருக்கு 'பாரத ரத்னா" வை வழங்கி விருதை கவுரவிக்கும் வேலையைப் பார்க்க வேண்டும்/////
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
30-செப்-202122:13:22 IST Report Abuse
mathimandhiri தானைத் தலைவருக்கு வயது வெறும் ஐம்பது பிளஸ் தான்/// ஆனால் நாட்டின் வரலாறு, கட்டமைப்பு, கலாச்சாரம்/// பெருமை, மக்களின் வாழ்க்கை முறை, இமயம் முதல் குமரி வரையிலான பரப்பின் தொன்மை, இவற்றில் உள்ள அறிவித்த திறன் அப்பப்பா இப்படி ஒரு ஜீனியஸா? 'பாரத" நாட்டின் அருந்தவப் புதல்வன், அரசாள பிறந்திருக்கும் அடலேறு,, திறமையின் சிகரம், பொறுப்புணர்ச்சியின் புகலிடம், பகைவனுக்கு சிம்ம சொப்பனம், அறிவு முதிர்ச்சியில் ஆதவன், கல்விக்கடல், ராஜ தந்திரத்தின் இலக்கணம், மக்களைக் கவரும் மாமேரு... இன்னாரின் வாயிலிருந்து உதிரும் முத்துக்கள் ஒவ்வொன்றும் கோடி பெறும்//////வாழ்க எம்மான்
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
30-செப்-202122:00:17 IST Report Abuse
mathimandhiri thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X