உலகளவில் 2-ல் ஒருவர் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளனர்: ஆக்ஸ்போர்ட் பல்கலை!

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
லண்டன்: உலக மக்கள் தொகையில் சுமார் 45 சதவீதம் பேர் அதாவது 352 கோடி மக்கள் கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸாவது போட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவு திட்டம் புள்ளிவிவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது.கோவிட் வைரஸ் தொற்று உலகளவில் வெடித்து கிளம்பியதும், சிகிச்சைக்கு என்ன மருந்து தருவது என்ற குழப்பம் வல்லரசு நாடுகளிடமே இருந்தது. வைரஸ் தொற்று உலகளவில் பரவத்
கோவிட், தடுப்பூசி, ஆப்ரிக்கா,சீனா, covid, corona, vaccine

லண்டன்: உலக மக்கள் தொகையில் சுமார் 45 சதவீதம் பேர் அதாவது 352 கோடி மக்கள் கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸாவது போட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவு திட்டம் புள்ளிவிவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது.

கோவிட் வைரஸ் தொற்று உலகளவில் வெடித்து கிளம்பியதும், சிகிச்சைக்கு என்ன மருந்து தருவது என்ற குழப்பம் வல்லரசு நாடுகளிடமே இருந்தது. வைரஸ் தொற்று உலகளவில் பரவத் தொடங்கிய சில மாதங்கள் ஆகியிருந்த நிலையில், பாரத் பையோடெக், அஸ்ட்ராஜெனகா, ஜான்சன் மற்றும் ஜான்சன், மாடர்னா, பைசர், சினோபார்ம் போன்ற நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு மிக விரைவில் அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன.

தமிழகம் போன்று உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரங்கள், புரளிகள் பரப்பப்பட்டன. இரண்டாம் அலை ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திடீர் என சில நாட்களில் இறந்து போனதை கண்ட மக்கள் தடுப்பூசியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.


ஆப்ரிக்காவில் மந்தம்!இன்றைய தேதியில் உலகில் 352 கோடி மக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் கணிசமானோர் 2 டோஸ்களையும் பெற்றுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கையில் 78 சதவிகிதத்தினர், அதிக மற்றும் மேல் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 0.5 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். ஆப்ரிக்க கண்டம் தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவாக 6.7 சதவீத மக்களுக்கு மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது. இந்தியாவில் 18+ வயதினர் 47சதவீதம் பேர் ஒரு டோஸும், 17சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு தரவில் குறிபிடப்பட்டுள்ளது.


latest tamil news

சீனா முன்னிலை!


ஐக்கிய அரபு அமீரகத்தில் 95சதவீதம் பேர் ஒரு டோஸ் ஊசியும், அதில் 84சதவீதம் பேர் 2 டோஸும் பெற்றுள்ளனர். மற்றொரு சிறிய நாடான போர்ச்சுகலில் 87சதவீதம் பேர் ஒரு ஊசியும், 84சதவீதம் பேர் இரண்டு ஊசியும் பெற்றுள்ளனர். பெரிய நாடுகளில் சீனா அதிகபட்சமாக 73 சதவிகித மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக கனடாவில் 71சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். அமெரிக்காவில் 55சதவீதம் மக்கள் 2 டோஸ் பெற்றுள்ளனர். ஆசிய நாடுகளில் துர்க்மெனிஸ்தானில் தான் மிகக் குறைந்த அளவாக 0.5சதவீதம் மக்கள் மட்டுமே ஒரு டோஸ் பெற்றுள்ளனர். ஆப்கனில் 2சதவீதம் மக்கள் தொகையினர் மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.


இலக்கு குறைப்பு!குறைந்த வருவாய் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பிரச்னை உள்ளது. உலக சுகாதார நிறுவனம் அத்தகைய நாடுகளுக்காக கோவாக்ஸ் என்ற தடுப்பூசி பகிர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2021-க்குள் 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயித்தனர். 2-ம் அலை உச்சமடைந்தது, 3-ம் அலை அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை கையிலெடுத்துள்ளன. இதனால் பற்றாக்குறை நிலவுகிறது. அதன் காரணமாக இலக்கை 140 கோடி டோஸாக குறைத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-செப்-202120:34:10 IST Report Abuse
Ramesh Sargam 2-ல் ஒருவர் - ஆஹா, கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. கூடிய சீக்கிரம் அந்த கொடிய கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து இந்த உலக மக்கள் மீளவேண்டும். வைரஸ் முற்றிலும் அழியவேண்டும்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
29-செப்-202118:14:59 IST Report Abuse
ponssasi கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான்னு கிராமத்து பழமொழி சொல்லுவாங்க. வாயில வந்ததெல்லாம் பேசறது பல்கலைக்கழகம்னு சொல்லலாம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
29-செப்-202118:08:01 IST Report Abuse
வெகுளி நல்லவேளை இத மோடிஜி கூறவில்லை.... சொல்லியிருந்தா ஒருவர் மட்டும்தான் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளதாக்க மோடி கூறினார்ன்னு விடியல் ஊடகங்கள் பரப்பி விட்டிருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X