அமித்ஷாவை சந்தித்தார் அமரீந்தர்சிங்: பா.ஜ.,வில் இணைய முடிவு ?

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பாக உள்ள பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக ,முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், இன்று (செப்.29) மத்திய அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார். அமரீந்தர் சிங்குக்கு எதிராக
 அமித்ஷா,  அமரீந்தர்சிங்: பா.ஜ.,, இணைய முடிவு ?

புதுடில்லி: அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பாக உள்ள பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக ,முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், இன்று (செப்.29) மத்திய அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார். அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து செப்.18-ல் அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார்.


latest tamil news


புதிய அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, மாநில காங்., தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று (செப்.28) ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணமாக அவர் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இருப்பினும் சித்து ராஜினாமாவை மேலிடம் ஏற்கவில்லை.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை (செப்.29) டில்லி சென்றுள்ள அமரீந்தர்சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லம் சென்று சந்தித்து பேசினார். இதன் மூலம் அவர் பா.ஜ.,வில் இணைய தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
29-செப்-202122:00:50 IST Report Abuse
elakkumanan ஆத்தாளும் மகனும்தான் இருப்பார்கள் போல் தெரிகிறது....மீதி எல்லாரும் குதி கால் பிடரியில் பட ஓடுகிறார்கள்...எங்க ஊரு கிளை யாராவது ஏதாவது போடமாட்டங்களா ன்னு தட்டோட அறிவாலய வாசலில் நிக்குதுக....வெக்கம் , ரோசம், மானம், சூடு , சொரணை இது போன்ற வார்த்தைகளை கேட்டு அறியா கும்பல்....காமராஜர் என்ற மகான் காலடி தூசிக்கு கூட பெறாத விருந்தாளிகள்..........இப்பிடி ஒரு கும்பலை வச்சு , பிரதம வேட்பாளரை அறிவித்த அறிஞர் எங்க ஊர்க்காரர் தான்.. எங்க ஊரு அறிவு யாருக்கு வரும்..சிவகங்கை திருடன் எல்லாம் சுயநலத்தின் திருட்டுத்தனத்தின் உருவம்.. ரோசம் இல்லை.ஒட்டு இல்லை...மரியாதை இல்லை..பதவி இருக்கு, பணம் இருக்கு... ஜாமீன் இருக்கு...உசுரு இருக்கு...
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
29-செப்-202121:08:30 IST Report Abuse
BALU சரியான நாட்டுக்கு மிகவும் தேவையான முடிவை எடுத்துள்ளார் அமரீந்தர் சிங். பாகிஸ்தான் எல்லையோர மாநிலமான பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்லபோதைப் பழக்கத்தால் ஊறிப்போய்விட்ட பஞ்சாப் சிங்கங்களை(பஞ்சாப் ஆண்கள்) மீட்டெடுக்க அங்கு பிஜேபி ஆட்சி அமைய வேண்டும்.முட்டாள்தனமான விவசாய சங்கங்களின் போராட்டமும் முடிவுக்கு வரும்.இதேபோல் பங்களாதேஷ் எல்லை மாநிலமான மே.வங்கத்திலும் விரைவில் பிஜேபி- ஆட்சி அமைப்பது தான் நம் நாட்டுக்கு நல்லது.மொத்தத்தில் காங்கிரஸ் இல்லாத இந்தியா தான் இந்தியர்களுக்கு நல்லது.ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-செப்-202120:46:51 IST Report Abuse
Vena Suna ஸ்டெரிலைட்க்கு நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்த பிறகு எவன் வருவான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X