சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விபத்து கரூரில் பரபரப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கரூர் கரூர்: நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசாரும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று மதியம் நடத்தியது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருச்சி சாலையில் பொதுமக்கள் கடந்து செல்லும் சாலையின் நடுவே தரை விரிப்புகள்
 விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  விபத்து கரூரில் பரபரப்பு



கரூர் கரூர்: நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசாரும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று மதியம் நடத்தியது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருச்சி சாலையில் பொதுமக்கள் கடந்து செல்லும் சாலையின் நடுவே தரை விரிப்புகள் விரித்து அதன் மீது நடன கலைஞர்கள் ஆiடல் பாடலுக்கு ஆடினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இரண்டு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு நடுவில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டினர். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லெட், பேனாக்களை பரிசுகளாக சாலையில் குறுக்கே சென்று வழங்கி வந்தனர்.



அப்போது முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் நின்று விட, பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 45 வயது மதிக்கதக்க நபர் இரு சக்கர வாகனத்தை கட்டுபடுத்த முடியாமல் முன்னாள் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் தலையில் படுகாயத்துடன் விழுந்தார். விழுந்தவர் எழுந்தரிக்கவில்லை.

இதனையடுத்து அங்கு இருந்த போக்குவரத்து காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு, ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய போக்குவரத்து காவலர்களே விபத்துக்கு காரணமாகி விட்டதாகவும், கூறப்படுகின்றது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X