கவலையில் காங்., | Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கவலையில் காங்.,

Added : செப் 29, 2021
Share
கவலையில் காங்., 'ஏற்கனவே ஆட்சியை பிடிக்க முடியாமல் கட்சி கலகலத்து கிடக்கிறது. இதில் கோஷ்டி மோதல் வேறா... உருப்பட்ட மாதிரி தான்' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், கேரள மாநில காங்கிரசார். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், படு தோல்வி தான் பரிசாக கிடைத்தது.மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் மீது

அக்கம் பக்கம்

கவலையில் காங்.,

'ஏற்கனவே ஆட்சியை பிடிக்க முடியாமல் கட்சி கலகலத்து கிடக்கிறது. இதில் கோஷ்டி மோதல் வேறா... உருப்பட்ட மாதிரி தான்' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், கேரள மாநில காங்கிரசார். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், படு தோல்வி தான் பரிசாக கிடைத்தது.மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் மீது கடும் அதிருப்தி இருந்தும், காங்கிரசாரின் கோஷ்டி பூசலால், இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை தக்க
வைத்தது.இத்தனைக்கும் ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியிலிருந்து தான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் கேரளாவில் சுற்றி சுற்றி வந்து பிரசாரம் செய்தும் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கு காரணமானவர்களை களையெடுக்கும்படி காங்., மேலிடம் பச்சைக்கொடி துாக்கியதை அடுத்து, கேரள மாநில காங்., தலைவர் சுதாகரன் அதிரடியைத் துவக்கி உள்ளார். ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி, ராமச்சந்திரன், சுதீரன் போன்ற மூத்த தலைவர்களுடைய ஆதரவாளர்களின் பதவியை பறித்தார். இதனால் கடுப்பான சுதீரன், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
'எங்களைப் போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனையை சுதாகரன் மதிப்பது இல்லை. இப்படி இருந்தால், கட்சி எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது' என, சுதீரன் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். சுதாகரனோ, 'தேர்தல் தோல்விக்கு காரணமே, இவரைப் போன்றவர்கள் தான். இவர்களை களையெடுத்தால் போதும்' என்கிறார். கேரள காங்கிரசில் நடக்கும் இந்த குடுமிப்பிடிச் சண்டையால் காங்., மேலிடம் கவலையில் ஆழ்ந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X