சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2006ல், அப்போதைய முதல்வர் கருணாநிதியால், 'வருமுன் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டது. அது, அடுத்து அமைந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அந்த திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.'டவுட்' தனபாலு: 'பழைய

'டவுட்' தனபாலு


தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2006ல், அப்போதைய முதல்வர் கருணாநிதியால், 'வருமுன் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டது. அது, அடுத்து அமைந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அந்த திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

'டவுட்' தனபாலு: 'பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றி, புதிய திட்டங்கள் போல தமிழக அரசு அறிமுகம் செய்கிறது' என, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, இந்த பழைய திட்டத்தை செயல்படுத்த இவ்வளவு 'பந்தா' வேண்டுமா. இதை தமிழக அரசு யோசிக்கவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. மேலும், முதல்வரை தவறாக வழிநடத்துகின்றனரோ என்ற 'டவுட்'டும் அவ்வப்போது வருகிறது!


தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
: உள்ளாட்சி தேர்தல் முடிந்த மூன்று நாட்களில், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் இடம் கிடைக்காத நம் கட்சியினருக்கு, சங்கங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

'டவுட்' தனபாலு: எல்லாமே, 'பிளான்' பண்ணித் தான் செய்கிறீர்களா... எல்லா பொறுப்புகளுக்கும் கட்சியினரையே நியமிக்கிறீர்களே... அப்படியானால், நேர்மையான தேர்தல், நியாயமான முடிவு, பாகுபாடு பார்க்காத மக்கள் பிரதிநிதிகள் என்பதெல்லாம் பொய் தானோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறது!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் சிறுவர்கள் ஈடுபட்ட கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு கூடுதலாகி இருக்கிறது. ஏழை சிறுவர்களுக்கு பல விதமான ஆசை காட்டி, குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதை தடுக்க தேவையான திட்டங்களை அரசும், சமுதாயமும் எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: கொடூர குற்றங்கள், கூலிப்படைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் சிறார்களே. அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் கூலிப்படை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன் பின்பாவது கூலிப்படை குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதே மக்களின், 'டவுட்' ஆக உள்ளது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-செப்-202115:33:53 IST Report Abuse
D.Ambujavalli கூலிப்படையாவது, ஒழிப்பதாவது பல அரசியல்வாதிகள் மனைவி இல்லாமல் கூட இருந்து விடுவார்கள், ஆனால் தங்கள் ஆணைகளை ‘காலால் இட்டால் தலையால் முடிக்கும்’ கூலிப்படையை விட்டுக்கொடுப்பார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X