தமிழகம் பிழைத்தது!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தமிழகம் பிழைத்தது!

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
தமிழகம் பிழைத்தது!ஆ.கண்ணன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., வள்ளல் குணம் மிக்கவர். அதனால் தான் அவரை, மக்கள் தங்கள் தலைவராக கொண்டாடினர்.மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், தேர்தல் பிரசாரத்தின் போது, 'நான் எம்.ஜி.ஆரின் நீட்சி' என்றார்; அதை ஏற்று கொள்ள முடியவில்லை.எம்.ஜி.ஆரிடம் இருக்கும் எந்த குணம் கமலிடம் இருக்கிறது?கடந்த 2021


தமிழகம் பிழைத்தது!ஆ.கண்ணன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., வள்ளல் குணம் மிக்கவர். அதனால் தான் அவரை, மக்கள் தங்கள் தலைவராக கொண்டாடினர்.மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், தேர்தல் பிரசாரத்தின் போது, 'நான் எம்.ஜி.ஆரின் நீட்சி' என்றார்; அதை ஏற்று கொள்ள முடியவில்லை.எம்.ஜி.ஆரிடம் இருக்கும் எந்த குணம் கமலிடம் இருக்கிறது?கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, இவரது வேட்பு மனுவில் காட்டிய சொத்தின் மதிப்பு 176 கோடி ரூபாய்.கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். 176 கோடி ரூபாய் சொத்து உடைய கமல், கொரோனா நிவாரணத்திற்கு எந்தவித நிதியுதவியும் வழங்கவில்லை.
கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்வீர்களா?' என, நிருபர்கள் கேட்ட போது, அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?'நான் வருமான வரி செலுத்துகிறேன். என்னால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்' எனக் கூறினார். இவரா, எம்.ஜி.ஆரின் நீட்சி?நிதியுதவி செய்வது என்பது தனிப்பட்ட உரிமை; அதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், வாரி கொடுத்த வள்ளலான எம்.ஜி.ஆரின் நீட்சி என, கமல் கூறியதைத் தான்
ஏற்கவே முடியவில்லை.சட்டசபை தேர்தலில் ம.நீ.ம., படு தோல்வி அடைந்தது. அதன் பின் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தன்னைத் தானே தலைவராகவும், பொதுச் செயலராகவும் அறிவித்து கொண்டார். தன் கட்சி உறுப்பினர்கள் மீது கமலுக்கு அவ்வளவு, 'நம்பிக்கை!'நல்ல வேளை இவரது கட்சி ஆட்சிக்கு வரவில்லை. வந்திருந்தால் இவரே எல்லா அமைச்சர் பொறுப்புகளையும் ஏற்றிருப்பார். தமிழகம் பிழைத்தது!இவரை போல சினிமா வெளிச்சத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்திற்கு வருவோர், 2 அல்லது 3 சதவீத ஓட்டுகளை தான் பிரிக்க முடியும்; ஒரு காலமும்
ஆட்சியை பிடிக்க முடியாது.எனவே கமல், கட்சியை கலைப்பது தான் அவருக்கும், தமிழகத்திற்கும் நல்லது.


சில்லரை அவசியம்!எம்.கே.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஏ.டி.எம்., அட்டைகள், வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் பெரும் உதவி செய்கின்றன. ஒருவர், தன் வங்கி கணக்கில் இருந்து எந்நேரமும் ஏ.டி.எம்., மையத்தில் இருந்து பணம் எடுத்து கொள்ளலாம்.தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க மட்டுமல்ல; 'டிபாசிட்' செய்யவும் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அனைத்து பரிவர்த்தனைகளும் ஏ.டி.எம்., மையத்திலேயே செய்து கொள்ள முடியும்.வங்கி நிர்வாகம் அனைத்தும் இன்று கணினிமயமாகி விட்டது. 'சர்வர்' பழுதானால், பெரும் பிரச்னை ஏற்படுகிறது. சர்வர் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, உரிய குழு அமைக்க வேண்டும்.'பாஸ் புக்' பதிவு செய்யவும் இயந்திரம் வந்து விட்டது. ஆனால், இயந்திரத்தில் பதிவு செய்யப்படும்போது பாஸ் புத்தகங்களில் பல பக்கங்கள் வீணாகின்றன. இதை தவிர்க்க வேண்டும். பாஸ் புக் பதிவு செய்து கொடுப்பதற்காக ஊழியர் ஒருவரை
நியமிக்கலாம்.வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால், நாற்காலிகளும் குறைந்து விட்டன போலும். மூத்த குடிமக்கள், வங்கியில் அமர நாற்காலிகள் கிடையாது.முக்கியமாக வங்கி களில் 500 ரூபாய்க்கும் குறைவான 100, 50, 20, 10 ரூபாய் சில்லரைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. நடுத்தர மக்களுக்கு தேவைப்படுவது 100 ரூபாய்க்கும் குறைவான சில்லரைகளே. மக்கள் பயன்பாட்டிற்கு சில்லரை வழங்க
வேண்டியது வங்கிகளின் கடமை.வங்கி நிர்வாகத்தில் உள்ள சின்ன சின்ன குறைகளையும் சரி செய்ய வேண்டும்.


நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!எஸ்.பாலசுந்தரம்,கரூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கரூர், காங்., - எம்.பி., ஜோதிமணியின் தகுதி, திறமை, ஆற்றல், அறிவு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஓட்டு அளித்து அவரை பார்லிமென்டுக்கு அனுப்பி வைத்ததன் பலனை, தொகுதி மக்களாகிய நாங்கள் அன்றாடம் அனுபவித்து வருகி றோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜோதிமணியின் முழு ஆற்றலும் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், அன்றாடம் அதை அறிக்கை வாயிலாகவோ, பேட்டி வாயிலாகவோ நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.இதை அவருக்கு தெரிவிக்கவும், உணர்த்தவுமே இக்கடிதம்.'ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து, அரசு பள்ளியில் தமிழ் வழியில் போராடி படித்து மருத்துவ கனவு காணும் மாணவர்களுக்கு, 'நீட்' எவ்வளவு பெரிய அநீதி என்பதை ராஜன் கமிட்டி விவரிக்கிறது. அதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்' என, ஜோதிமணி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
முதல் விஷயம்... அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்க, ஏன் போராட வேண்டும்; எதற்கு போராட வேண்டும்; யாரிடம் போராட வேண்டும்? சக மாணவர்களிடமா, பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமா, பெற்றோரிடமா, அரசிடமா?இரண்டாவது விஷயம்... தமிழில் படித்த மாணவனுக்கு, தமிழில் தேர்வு எழுத என்ன கஷ்டம் இருக்கப் போகிறது? ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, குஜராத்தி, மலையாளம், பஞ்சாபி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. அது, ஜோதிமணிக்கு தெரியுமா?
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, தாய் மொழியில் தேர்வு எழுத தெரியவில்லை; முடியவில்லை; இயலவில்லை என்றால், கோளாறு அந்த நீட் தேர்வில் இல்லை; அரசு பள்ளியில் தான் உள்ளது!இந்த உண்மை புரியாமல், நீட் தேர்வின் மீது பழியை சுமத்தி வேடிக்கை காட்டுவது நியாயமா ஜோதிமணி?அதனால் தான் சொல்கிறோம்... ஜோதிமணியின் அறிவும், ஆற்றலும் எங்களுக்கு தெரியும். அதை அடிக்கடி அறிக்கை வெளியிட்டு நிரூபிக்க வேண்டாம் என, அவரை அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X