சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 29, 2021
Share
Advertisement
தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற, தி.மு.க.,வின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை. மத்திய பட்டியலில் இருந்தால் தான், கல்வி தொடர்பாக மாநில அரசுகளுக்கு அதிக நிதி கிடைக்கும்.சத்தமாக சொல்லாதீங்க; கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுட போறாங்க. அப்புறம் அரசியல் எதிர்காலம் உங்கள் கட்சிக்கு அம்போ தான்!மார்க்சிஸ்ட் மாநில

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற, தி.மு.க.,வின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை. மத்திய பட்டியலில் இருந்தால் தான், கல்வி தொடர்பாக மாநில அரசுகளுக்கு அதிக நிதி கிடைக்கும்.சத்தமாக சொல்லாதீங்க; கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுட போறாங்க. அப்புறம் அரசியல் எதிர்காலம் உங்கள் கட்சிக்கு அம்போ தான்!


மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
'பி.எம்.கேர்ஸ்' நிதி வாயிலாக, இந்திய மக்களை அடிமுட்டாளாக கருதியுள்ளனர். அதனால் தான், அந்த நிதிக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என அறிவித்துள்ளனர். இது மிகப் பெரிய மோசடி. விரைவில், இந்த கேடுகெட்ட போக்குகளை மக்கள் சக்தி முடிவிற்கு கொண்டு வரும்.அந்த நிதி பிரதமரிடம் உள்ளது. தனக்கு வந்த அன்பளிப்புகளையே, ஏலம் விட்டு அரசுக்கு காசு சேர்க்கும் அவர், 'பி.எம்.கேர்ஸ்' நிதியை சொந்த செலவுக்கு பயன்படுத்துவார் எனச் சொல்வது, உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல?


காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி
: தேவகோட்டையில் காங்., கூட்டத்தில் நடந்த மோதல், கட்சி இன்னும் உயிரோட்டமாக உள்ளது என்பதை காட்டுகிறது. சிவகங்கை தொகுதியில் சில நேரங்களில் மோதல் இதை விட மிகவும் கடுமையாக இருக்கும். இது, 'நான் அவனை ரொம்ப திட்டுவேன்; அவன் என்னை ரொம்ப மோசமா திட்டுவான்' என, நடிகர் வடிவேலு காமெடி பேச்சு போலல்லவா இருக்கிறது...


நாராயண ஹிருதாலயா மருத்துவ குழுமத்தின் தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி அறிக்கை:
அமெரிக்க மருத்துவமனைகளில் ஒரு நாள் இரவு 200 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால், அதில் ஒருவராவது கட்டாயம் இறந்து விடுவார். அந்த அளவுக்குத் தான் அந்நாட்டின் மருத்துவம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் அப்படியில்லை. பின் ஏன் பிரபலங்கள் பலரும், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக ஓடுகின்றனர்?


தி.மு.க., தலைமை நிலைய செயலர் பூச்சிமுருகன் அறிக்கை:
பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் 39 வயதில் எம்.பி., சசிகலாவின் அக்கா மகன் தினகரன் 38 வயதில் எம்.பி., ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 27 வயதில் எம்.பி., உதயநிதி, தன் 42வது வயதில் எம்.எல்.ஏ.,வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.உதாரணம் எல்லாம் சரி தான். நீங்கள் சொன்ன உதாரணங்களின் உறவினர்கள், 'எந்த காரணத்தை கொண்டும் எங்கள் குடும்பத்திலிருந்து மகனோ அல்லது என்மருமகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள்' என, சொல்லவில்லையே!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X