சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கோவை தி.மு.க.,வினருக்கு காத்திருக்கும் 'ஆப்பு!'

Added : செப் 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை தி.மு.க.,வினருக்கு காத்திருக்கும் 'ஆப்பு!'''சமூக நீதி பத்தி மணிக்கணக்கா மேடையில முழங்கினா மட்டும் போதுமோ...'' எனக் கேட்டபடியே, பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.''யாரைப் பத்தி சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சொந்த மாவட்டம் தென்காசி... இங்க இருக்கற குருவிகுளம் ஒன்றியத்துல 22 கவுன்சிலர் பதவிகளுக்கு, தலா எட்டு


டீ கடை பெஞ்ச்


கோவை தி.மு.க.,வினருக்கு காத்திருக்கும் 'ஆப்பு!'



''சமூக நீதி பத்தி மணிக்கணக்கா மேடையில முழங்கினா மட்டும் போதுமோ...'' எனக் கேட்டபடியே, பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.
''யாரைப் பத்தி சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சொந்த மாவட்டம் தென்காசி... இங்க இருக்கற குருவிகுளம் ஒன்றியத்துல 22 கவுன்சிலர் பதவிகளுக்கு, தலா எட்டு இடங்கள்ல தி.மு.க.,வும் -
ம.தி.மு.க.,வும் போட்டியிடறா ஓய்...

''மீத ஆறு இடங்களை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளுக்கு குடுத்துட்டா... இதுல, ம.தி.மு.க., போட்டியிடற எட்டுல, ஒரே ஒரு இடத்துல தான் வேற சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு 'சீட்' தந்திருக்கா ஓய்...

''மீத ஏழு இடங்கள்லயும் வைகோ சமுதாயத்தினருக்கு தான் சீட் தந்திருக்கா... இதனால, அந்தக் கட்சியில இருக்கற மற்ற சமுதாயத்தினர் மனம் குமுறிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
நாயர் தந்த சூடான மெதுவடையை மென்றபடியே, ''மேல்மட்டத்துல மாத்தினா மட்டும் போதுமா வே...'' எனக் கேட்ட அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரா, மதுரையைச் சேர்ந்த மூர்த்தி இருக்காருல்லா... இவர் பொறுப்பேற்றதும், வணிக வரித் துறையில, உயரதிகாரிகள் பலரை இடம் மாத்தினாரு வே...

''ஆனா, துணை கமிஷனர், உதவி கமிஷனர், சி.டி.ஓ., - ஏ.சி.டி.ஓ., நிலையிலான அதிகாரிகளை மாத்தலை... இவங்கள்ல துணை கமிஷனர் அந்தஸ்துள்ள சிலர், உயர் அதிகாரிகள் மட்டத்துல கப்பம் கட்டிட்டு, மதுரையிலயே 10 வருஷங்களுக்கு மேலா குப்பை கொட்டிட்டு இருக்காவ வே...

''இவங்களுக்கு கீழே இருக்கிற சி.டி.ஓ., - ஏ.சி.டி.ஓ.,க்கள் பலரும், ஒரே இடத்துல பல வருஷங்களா இருக்காவ... 'இதனால தான், மதுரை மண்டலத்துல வரி வருவாய் கம்மியா இருக்கு... இதை அமைச்சர் கவனிக்கணும்'னு, துறைக்குள்ளயே குரல்கள் கேட்குது வே...'' என முடித்தார் அண்ணாச்சி.

''கோவை தி.மு.க., வுல அதிரடி மாற்றங்கள் நடக்க போகுது பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''கோவை தி.மு.க., வை அஞ்சு மாவட்டமா பிரிச்சு, தனித்தனியா பொறுப்பாளர்களை போட்டும், சட்டசபை தேர்தல்ல மண்ணை கவ்வுனது தான் மிச்சம்... இந்த பொறுப்பாளர்கள்ல ஒருத்தர், அ.தி.மு.க., ஆட்சியில, 'வேலையில மணியா' இருந்த புள்ளியிடம் ரகசிய தொடர்புல இருந்து, மாதா மாதம் மாமூல் வாங்கிட்டு இருந்திருக்காரு பா...

''அதே மாதிரி இன்னும் ரெண்டு பொறுப்பாளர்கள், தங்களது 'ரியல் எஸ்டேட்' தொழிலுக்காக, அ.தி.மு.க., தரப்பை அனுசரிச்சு போயிருக்காங்க... எல்லாத்துக்கும் மேலா இப்ப மாவட்டத்துக்கு பொறுப்பா நியமிக்கப்பட்டிருக்கிற மாண்புமிகுவும், அ.தி.மு.க., 'மாஜி' குடும்பத்தோட நெருக்கமா இருக்காராம்...

''இதனால, மூணு பொறுப்பாளர்கள், மாண்புமிகு பதவிகளுக்கு 'ஆப்பு' காத்திருக்குன்னு, கோவை தி.மு.க., வட்டாரத்துல பேசிக்கிறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.அரட்டை முடிந்து பெரியவர்கள் கிளம்ப, அடுத்து பெஞ்சுக்கு வந்த கார்த்திக், கிருஷ்ணன், சேனாபதி, சக்கரபாணி ஆகியோரை கவனிக்க எழுந்தார் நாயர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
30-செப்-202118:22:36 IST Report Abuse
r.sundaram அந்தக்காலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவா இருந்தாலதான் சம்பாதிக்க முடியும். அப்படி சம்பாத்தித்தால்தான் தலைமைக்கு கப்பம் கட்ட முடியும். இது தலைமைக்கு தெரியாதா என்ன?
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
30-செப்-202110:31:35 IST Report Abuse
RandharGuy பரவாயில்லை தி மு க பத்தி மட்டும் பேசறா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X