பா.ஜ.,வில் இணைகிறாரா அமரீந்தர் சிங்? : டில்லியில் அமித் ஷாவை சந்தித்து பேச்சு

Updated : செப் 30, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர் :பஞ்சாப் காங்கிரசில் தினந்தோறும் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், காங்., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பா.ஜ.,வில்,அமரீந்தர் சிங்? :டில்லி, அமித் ஷா, பேச்சு

சண்டிகர் :பஞ்சாப் காங்கிரசில் தினந்தோறும் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், காங்., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார்.


சமூக வலைதளம்புதிய அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கான இலாகாக்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நேற்று சித்து தன் சமூக வலைதளத்தில், 'வீடியோ' பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர்
கூறியுள்ளதாவது:பஞ்சாப் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையே என் 17 ஆண்டு அரசியல் வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து
உள்ளேன்.


நான் தியாகங்கள்செய்யத் தயார். ஆனால் கொள்கையில் சமரசம் செய்ய மாட்டேன்.இன்றைக்கு அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மாநில அட்வகேட் ஜெனரல் நியமனங்களில் பல சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், ''சித்துவிடம் நேற்று பேசினேன். உட்கட்சி பிரச்னைகள் குறித்து காங்., தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.


முக்கிய முடிவுஇதற்கிடையே, டில்லி சென்றுள்ள பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பா.ஜ.,வில் இணையப் போவதாக பரபரப்பு எழுந்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமரீந்தர் சிங் நேற்று சந்தித்து பேசினார்.'அவர் பா.ஜ.,வில் இணையப் போகிறாரா?' என, நிருபர்கள் கேட்டதற்கு, அமரீந்தர் சிங் பதில் அளிக்கவில்லை. 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என, அமரீந்தர் சிங் தரப்பு தெரிவித்தது. 'சில நண்பர்களுடன் பேசிவிட்டு, முக்கியமான முடிவை விரைவில் அறிவிப்பேன்' என, அமரீந்தர் சிங் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


முடிவுகளை யார் எடுப்பது?கபில் சிபல் விரக்தி!காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பஞ்சாப் பிரச்னையால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ் சிக்கலான காலக்கட்டத்தில் உள்ளது. கட்சியின் நிலைமையை பார்க்க சகிக்க முடியவில்லை. யாரெல்லாம் தலைமைக்கு நெருக்கமானவர்கள் எனக் கருதப்பட்டனரோ, அவர்கள் தான் வெளியேறுகின்றனர்.

தலைமைக்கு வேண்டப்படாத, 'ஜி - -23' என கிண்டலாக அழைக்கப்படுவோர் இன்னமும் கட்சியில் நீடிக்கின்றனர். நாங்கள், 'ஜி - -23' தான். அதே சமயம், ஆமாம் சாமி போடும் தலையாட்டி பொம்மைகள் அல்ல. காங்.,கில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என தற்போது யாரும் இல்லை. அப்படியிருக்க, கட்சியின் தற்போதைய முக்கிய முடிவுகளை யார் தான் எடுக்கின்றனர் என்பதும் தெரியவில்லை.உடனடியாக காங்., உயர்மட்டக் குழுவை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி, இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதிஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-அக்-202116:12:24 IST Report Abuse
Bhaskaran Suyamariyaathai illaatha thalaivargal aaga irunthaal thaan maathaajiku padikum namma oor alagiriyaipol
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
01-அக்-202106:41:29 IST Report Abuse
கௌடில்யன் ராகுல் முதல் சோனியா வரை கோர்ட்டில் வாதாடும் கபில் சிபல் வீட்டில் அழகிய தக்காளி வீசியும் காரின் கண்ணாடிகளை உடைத்தும் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் ..
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202107:14:06 IST Report Abuse
Vijayan Singapore எல்லாம் இலங்கை தமிழரின் சாபம், திமுகவுக்கும் இது நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X