டில்லி அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடம் துவக்கம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, தேசபக்தி பாடம், பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 15ல் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய போது, 'டில்லி பள்ளிகளில், 12ம் வகுப்பு வரை, மாணவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள், பாடங்கள் நடத்தப்படும்' என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், டில்லி அரசு பள்ளிகளில்
டில்லி அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடம் துவக்கம்

புதுடில்லி: டில்லி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, தேசபக்தி பாடம், பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 15ல் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய போது, 'டில்லி பள்ளிகளில், 12ம் வகுப்பு வரை, மாணவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள், பாடங்கள் நடத்தப்படும்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டில்லி அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடம் துவக்கப்பட்டது. இது பற்றி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:முதல் கட்டமாக, ஆறு - எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தினமும் 40 நிமிடமும், ஒன்பது - 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களும், தேசபக்தி பாடங்கள் நடத்தப்படும்.


latest tamil news



நாற்பது நிமிட வகுப்பு, ஐந்து நிமிட தேசபக்தி தியானத்துடன் துவங்கும். இதில், 'நான் பாரத மாதாவை வழிபட்டு, நாட்டை வணங்குகிறேன் என, மனதுக்குள் கூறியபடி, மாணவர்கள் தியானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-202116:49:29 IST Report Abuse
Krishna Very good
Rate this:
Cancel
30-செப்-202111:31:01 IST Report Abuse
அப்சாமி அதை உடுங்க. எல்லோருக்கும் கிரிக்கெட் கட்டாயமாக்குங்கள். ஆத்மநிர்பரா கீழே ஃபாரின் காரன் வந்து நமக்காக துபாயில் விளையாடி துட்டு பாக்குறான். போற போக்கில் இந்திய வீரர்கள் யாரும் இருக்க மாட்டாங்க போலிருக்கு.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-செப்-202109:05:50 IST Report Abuse
elakkumanan ஆமா, தேசபக்தி ரைட்.... .எந்த தேசத்தின் மீது பக்தி.... பாக்கிஸ்தான்...சீனா.....தெளிவா சொல்லுங்கப்பா... காலையிலேயே, சோமபானம் ஏற்றி, கண்ணும் தெரியல.. ஒன்னும் தெரியல.........மதமா தேசமா என்று ஒரு நிலை வந்தால், மதமே முக்கியம் னு சொல்லும் ஆட்கள், இந்த தேஷ்பக்தி பாடத்தை சாய்சில் விட்டுடுவாங்களா.....எங்க ஊரில் ஒட்டு பக்தி, திருட்டு பக்தி, கமிஷன் பக்தி, இலவச பக்தி, மத பக்தி, இட ஒதுக்கீடு பக்தி, சிலை பக்தி, தள்ளுபடி பக்தி,ஒட்டு வங்கி பக்தி,......இப்பிடி நெறய உண்டு...வயிறே கருவறை.... சோறே கடவுள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X