பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,க்கள் தலையீட்டால் பட்டா திட்டம் முடக்கம்

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பத்திரப்பதிவு அடிப்படையில், உட்பிரிவு செய்ய தேவை இல்லாத நிலங்களுக்கான பட்டாக்களில், தானியங்கி முறையில் பெயர் மாற்றும் பணிகள், கிராம நிர்வாக அலுவலர் தலையீட்டால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். இதற்காக, தாலுகா அலுவலகங்களை அணுகுவோரை, அதிகாரிகள்

சென்னை:பத்திரப்பதிவு அடிப்படையில், உட்பிரிவு செய்ய தேவை இல்லாத நிலங்களுக்கான பட்டாக்களில், தானியங்கி முறையில் பெயர் மாற்றும் பணிகள், கிராம நிர்வாக அலுவலர் தலையீட்டால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். இதற்காக, தாலுகா அலுவலகங்களை அணுகுவோரை, அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.பரிந்துரைஇதற்கு தீர்வாக, பட்டா மாறுதல் பணிகளை எளிமைப் படுத்த, நில அளவைத் துறை சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதன்படி, உட்பிரிவு இன்றி, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட சொத்து முழுதும் விற்பனை செய்யப்பட்டால், பத்திரப்பதிவு அடிப்படையில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படும்.

இதில் வருவாய் துறை அதிகாரிகள் தலையிடக் கூடாது என்பதே இத்திட்டத்தின் அடிப்படை. ஆனால், பல இடங்களில் பதிவுத் துறை தகவல்கள் அடிப்படையில், பட்டா மாற்றம் நடக்க வில்லை. வி.ஏ.ஓ.,க்கள் தலையீடே காரணம் என்றும் தெரிகிறது.

இது குறித்து, பதிவுத் துறையினர் கூறியதாவது:தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டம், மக்களுக்கு பேருதவியாக அமைந்தது. இதன்படி, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்து விற்பனை பதிவாகும்போது, சார் - பதிவாளர்கள் பட்டா மாறுதலுக்கு பரிந்துரைக்கின்றனர்.இதற்கான விண்ணப்பம் வருவாய் துறைக்கு வந்து விட்டதாக, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது.

இதன்பின், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து, ஆவணங்களை சரிபார்க்க அழைப்பு வருகிறது.சார் - பதிவாளர்நேரில் செல்லாவிட்டால், 'உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது' என, மொபைல் போனுக்கு அடுத்த தகவல் செல்கிறது. சார் - பதிவாளர் நிலையில் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட நிலையில், வி.ஏ.ஓ.,க்கள் எப்படி இதில் தலையிடுகின்றனர் என்பது புதிராக உள்ளது.இது தொடர்ந்தால், தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் மொத்தமாக முடங்கி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
30-செப்-202109:26:09 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பட்டா மற்ற சில்லறை சம்பாதிக்க அவர்கள் விரும்புவதால் தடுக்கிறார்கள் .பட்டா மாற்றும் அதிகாரத்தை பதிவாளர் அலுவலகத்துக்கே தந்தாள் லஞ்சம் தவிர்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X