அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் பிரச்னை ஏன்? அமைச்சர் விளாசல்!

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை:''காவிரி நதி நீர் விவகாரத்தில் ஒரு சில நபர்கள் வேண்டும் என்றே பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த கர்நாடக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஈஸ்வரப்பா, குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின் ஆதீனத்திடம் வாழ்த்து பெற்றார்.ஈஸ்வரப்பா கூறியதாவது: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் ஆசி பெற வந்தேன். தமிழகமும்,

மதுரை:''காவிரி நதி நீர் விவகாரத்தில் ஒரு சில நபர்கள் வேண்டும் என்றே பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த கர்நாடக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஈஸ்வரப்பா, குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின் ஆதீனத்திடம் வாழ்த்து பெற்றார்.ஈஸ்வரப்பா கூறியதாவது: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் ஆசி பெற வந்தேன். தமிழகமும், கர்நாடகமும் சகோதர மாநிலங்கள். அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.

சிலர் அரசியல் சுயநலத்திற்காக காவிரி பிரச்னையை பயன்படுத்துகின்றனர். இரு மாநிலங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. 'டிரிபியூனல்' உத்தரவை இரு மாநிலங்களும் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X