கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலா உறவினர் மீது ரூ.5 கோடி மோசடி வழக்கு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை:எம்.எல்.ஏ., 'சீட்' வாங்கித் தருவதாக, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக, சசிகலா உறவினர் ராஜராஜன் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் செம்மலைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் 52; ரியல் எஸ்டேட் அதிபர். அ.தி.மு.க., உறுப்பினரான இவருக்கு, சென்னை தி.நகர் பத்மநாபன் தெருவில் வசித்து வரும் ராஜராஜன், 42, என்பவரின்

சென்னை:எம்.எல்.ஏ., 'சீட்' வாங்கித் தருவதாக, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக, சசிகலா உறவினர் ராஜராஜன் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் செம்மலைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் 52; ரியல் எஸ்டேட் அதிபர். அ.தி.மு.க., உறுப்பினரான இவருக்கு, சென்னை தி.நகர் பத்மநாபன் தெருவில் வசித்து வரும் ராஜராஜன், 42, என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.


மூன்று தவணை



சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் 2வது மருமகன் தான் ராஜராஜன். இவர், தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, 2016 சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.இதற்காக, மூன்று தவணைகளில் ரொக்கமாக, 5 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். இது குறித்து கருணாகரன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் கருணாகரன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளன.இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், ராஜராஜனுக்கு எதிராக மனு தாக்கல் செய்துஉள்ளார்.


நடவடிக்கை

அதில், 'எம்.எல்.ஏ., சீட் வாங்கித் தருவதாக, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த ராஜராஜன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியுள்ளார். மனுவை ஆய்வு செய்த பின், அக்., 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, நீதிபதி பரத் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X