பொது செய்தி

தமிழ்நாடு

எல்.எல்.பி., மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் துவக்கம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை:சட்டப் படிப்பில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன. மாணவர்களுக்கான அறிமுக விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்றார்.தமிழக சட்ட பல்கலையின் கீழ் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லுாரியின், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்புகளுக்கு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.இந்த மாணவர்களுக்கு, இன்று

சென்னை:சட்டப் படிப்பில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன.

மாணவர்களுக்கான அறிமுக விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் பங்கேற்றார்.தமிழக சட்ட பல்கலையின் கீழ் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லுாரியின், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்புகளுக்கு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.இந்த மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.

புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி, சட்ட பல்கலை வளாகத்தில் நடந்தது.துணை வேந்தர் சந்தோஷ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:மாணவர்கள் ஒழுக்கத்தை பேணி, கடமையில் இருந்து தவறாமல், கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.வயதில் மூத்தவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளித்து, தர்மத்தை குறிக்கோளாக கொண்டு, படிப்பை முடிக்க வேண்டும். சட்ட படிப்பின் முக்கியத்துவம் மற்றும் சட்டம் சார்ந்துள்ள வழிகாட்டு முறைகளையும், சட்டம் சார்ந்த எதிர்கால சவால்களையும், மாணவர்கள் விழிப்புணர்வுடன் அறிந்து கொள்ள வேண்டும்.

சட்டப்படிப்பு முடித்து, சமூகத்துக்கு சேவையாற்றும் வகையில், சிறப்பான வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பல்கலையின் பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம், பேராசிரியர் பாலாஜி, இளநிலை சட்டப்படிப்பு பிரிவு இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X