பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்கள் விபரங்களை பதிவு செய்ய அழைப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
குன்னுார் : குன்னுாரில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் விபரங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது.நீலகிரி மாவட்ட அளவிலான, அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை பதிவு செய்யும் முகாமின், துவக்க நிகழ்ச்சி குன்னுாரில் நடந்தது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமை வகித்தார்.தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த இந்த முகாமில், பா.ஜ.,-சி.ஐ.டி.யு.,-தமிழ்நாடு காங்.,-

குன்னுார் : குன்னுாரில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் விபரங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது.நீலகிரி மாவட்ட அளவிலான, அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை பதிவு செய்யும் முகாமின், துவக்க நிகழ்ச்சி குன்னுாரில் நடந்தது.

தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமை வகித்தார்.தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த இந்த முகாமில், பா.ஜ.,-சி.ஐ.டி.யு.,-தமிழ்நாடு காங்.,- தொழிற்சங்க யூனியன்- ஐ.என்.டி யு.சி.,-ஏ.ஐ.டி.யு.,-பி.எம்.எஸ்.,-லாரி ஓட்டுனர் சங்கம் குன்னுார், கோத்தகிரி, கூடலுார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில், தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்துதெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம், லெனின், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வசந்தா (ஊட்டி) நவீன் (கோத்தகிரி), கிருஷ்ண வேணி (குன்னூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X