நேனோ யூரியா பயன்பாடு: சாகுபடி செலவு மிச்சமாகும் ; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நேனோ' யூரியா பயன்பாடு: சாகுபடி செலவு மிச்சமாகும் ; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

Added : செப் 29, 2021
Share
ஊட்டி : 'நீலகிரி விவசாயிகள் சாகுபடி செலவை மிச்சப்படுத்த 'நேனோ' யூரியாவை பயன்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில், விவசாய மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தனியார் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செப்.,

ஊட்டி : 'நீலகிரி விவசாயிகள் சாகுபடி செலவை மிச்சப்படுத்த 'நேனோ' யூரியாவை பயன்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில், விவசாய மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தனியார் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செப்., மாதத்திற்கு இதுவரை, 748 டன் யூரியா பெறப்பட்டுள்ளதுவிவசாயிகள் யூரியா மற்றும் பிற நேரடி உரங்களை, மண் பரிசோதனையின் அடிப்படையில் அல்லது பயிர் உற்பத்தி கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவை மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமான உரங்களை வாங்கி சாகுபடி செலவை அதிகரித்து, மண் வளம் வீணாவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்

'நேனோ' யூரியாவால் பயன்:வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ஜாகிர் நவாஸ் கூறுகையில்,''நேனோ யூரியாவை உபயோகப்படுத்தினால், 50 சதவீதம் யூரியாவுக்கு ஆகும் சாகுபடி செலவை மிச்சப்படுத்தலாம். மாவட்டத்தில் உரம் இருப்பு, வினியோகம் ஆகியவற்றை உர கண்காணிப்பு குழு, அனைத்து கூட்டுறவு, தனியார் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறது. உரம் இருப்பு, வினியோகம் தொடர்பான புகார்களுக்கு, 94426-42662 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X