பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் சீசன் நாளை துவக்கம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை:நெல் கொள்முதல் சீசன் நாளை துவங்குவதால், நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 2,015 ரூபாயும்; உயர் தர நெல்லுக்கு, 2,060 ரூபாயும் வழங்க உள்ளது.மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. அக்., 1 முதல் செப்., 30 வரை நெல் கொள்முதல் சீசன்.கடந்த, 2020 அக்., துவங்கிய

சென்னை:நெல் கொள்முதல் சீசன் நாளை துவங்குவதால், நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 2,015 ரூபாயும்; உயர் தர நெல்லுக்கு, 2,060 ரூபாயும் வழங்க உள்ளது.

மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. அக்., 1 முதல் செப்., 30 வரை நெல் கொள்முதல் சீசன்.கடந்த, 2020 அக்., துவங்கிய சீசன், இன்று முடிகிறது. மத்திய அரசு, இந்த சீசனில், 100 கிலோ எடை உடைய, குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,868 ரூபாயும்; உயர் தர நெல்லுக்கு, 1,888 ரூபாயும், குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கியது. அதனுடன் சேர்த்து, தமிழக அரசு, சாதாரண நெல்லுக்கு, 50 ரூபாயும்; உயர் தர நெல்லுக்கு, 70 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கியது.

நேற்று முன்தினம் வரை, 44.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், புதிய கொள்முதல் சீசன் துவங்குகிறது.மத்திய அரசு, நாளை துவங்கும் சீசனில், குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,940 ரூபாயும்; உயர் தரத்திற்கு, 1,960 ரூபாயும் வழங்குகிறது. தமிழக அரசு, சாதாரணத்திற்கு, 75 ரூபாய் சேர்த்து, 2,015 ரூபாயாகவும்; உயர் தரத்திற்கு, 100 ரூபாய் சேர்த்து, 2,060 ரூபாயாகவும் வழங்க உள்ளது.

முதல் முறையாக முறைகேட்டை தடுக்க, மின்னணு முறையில் நெல் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, வாணிப கழக இணையதளத்தில் விவசாயிகள், தங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.அதற்கு ஏற்ப, கொள்முதல் நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொள்முதல் தேதி உள்ளிட்ட விபரங்கள், விவசாயிகளின், மொபைல் போன் எண்ணுக்கு தெரிவிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X